மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் ( டிசம்பர் 22, 2025, திங்கள்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, E.Bகாலனி, நடராஜ் நகர் அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, ESI மருத்துவமணை, கைலாசபுரம், ss காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு. சும்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, தினமலர் பத்திரிக்கை, DSP நகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 1-9 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.
கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரம்
கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், வெள்ளினிப்பட்டி, சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, V.புதுார், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி, பாண்டாங்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.