1036 தலைமை ஆசிரியர் இடங்கள் காலி; நிரப்ப தாமதம் ஏன்? காரணம் சொன்ன கல்வித்துறை!
பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களில் 1036 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு நிலுவைக்கான காரணம் குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கடுமையாகச் சாடி இருந்தார். ’’தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்கவில்லை’’ என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து இதற்கான காரணம் குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
1036 பணியிடங்கள் காலி
தமிழகத்தில் பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களில் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்காலிப்பணிடங்கள் கீழ்க்காணும் காரணங்களின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்ப இயலாத நிலை உள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு ஊட்டுப்பதவியாக தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் பட்டதாரி ஆசிரியர் பதவி மட்டும் உள்ளதால் இப்பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியலில் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலையாசிரியர்களாக பணிபுரிபவர்களைச் சேர்க்கக் கூடாது என தீர்ப்பாணை வழங்கப்பட்டது.
மீண்டும் வழக்கு விசாரணை
01.01.2016 க்கு பின்னர் முதுகலை ஆசிரியர் பதவியில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் சென்ற 1187 பணியாளர்களை மீண்டும் முதுகலை ஆசிரியர்களாக மீண்டும் தரம் இறக்காமல் தலைமை ஆசிரியர்களாக பணியில் தொடர்ந்து அனுமதிக்கவும் மற்றும் (To draw panel only with BT Assistants without considering PG Assistant) இனிவருங்காலங்களில் மேற்கண்ட தீர்ப்பாணையினை நடைமுறைப்படுத்திடவும் ஆணை வழங்கக் கோரி (Prospective effect) Miscellaneous Petition No.47685/2023, फ्रान 1411.2023) 2 வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 06.01.2026 அன்று வரப்பெற்று இவ்வழக்கு மீண்டும் 04.02.2026 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
முதுகலை ஆசிரியராக இருந்து உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற திரு.பொன்செல்வராஜ் என்பார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு வழங்கிய W.A. (MD) No. 1468 of 2017 நாள்.23.03.2023 தேதியிட்ட தொகுப்பு வழக்கின் இறுதியாணையின் மீது புதுடெல்லி உச்சநீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு SLP (c) No.3336 of 2024 தொடர்ந்து சிறப்பு விடுப்பு மனுவில் உச்சநீதிமன்றம் தனது 05.02.2024 நாளிட்ட இடைக்கால தீர்ப்பில் Till further orders, status quo with regard to those persons who are already on the subject posts shall be maintained" 61601 ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வழக்கில் அரசின் சார்பில் எதிர்வாதவுரை 18.04.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆசிரியர்கள் தற்போது உள்ள தங்களது பணியினை தக்க வைத்துக் கொள்ளவும், அடுத்த நிலை பதவி உயர்வுக்குச் செல்லவும், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என தீர்ப்பு வழங்கியது தொடர்ந்து அரசால் சீராய்வு மனு (Diary No. 56647 of 2025)2 செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர்களின் நலன் கருதிதான் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு மட்டும் 2026 ஆம் ஆண்டில் 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசால் அரசு / நகராட்சி உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















