மேலும் அறிய
Advertisement
தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் - மதுரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு
உற்பத்தியை நிறுத்தும் கதவடைப்பு போராட்டத்தால் 100 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தமிழ்நாடு அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 430 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இந்த நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவும், தொழில்துறை நிறுவனங்களுக்கான 8 மணி நேர பரபரப்பு நேர கட்டணம் (Peak Hour Charges) கட்டணத்தை திரும்ப பெறவும், 3B - TARIFF கட்டண முறையில் இருந்து 3A1 - TARIFF கட்டண நடைமுறைக்கு மாற்ற வேண்டும், தொழில்நிறுவனத்தினர் பயன்படுத்தும் சோலார் ( Solar ) மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும்,
#madurai | தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் - ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு.
— arunchinna (@arunreporter92) September 25, 2023
Further reports to follow -@abpnadu#abplive | @CMOTamilnadu #tneb | #protest | @LPRABHAKARANPR3 @ABPDesam pic.twitter.com/2lX31N3guH
ஆண்டுக்கொரு முறை மின் கட்டண உயர்வு அறிவிப்பான Multi Year Tariff -யை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்கவும் வேண்டியும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு தொழில்நிறுவன மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தும் கதவடைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ராணுவ வீரர்களிடம் பண மோசடி; மதுரை மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் புகார் மனு
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர். இதில் மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ், மடீட்சியா உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவன அமைப்பினரும், அப்பளம், எவர் சில்வர், இரும்புத் தொழில், உணவு தயாரிப்பு, பட்டறை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்யும் சங்கத்தினர்களும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசை வலியுறுத்தி நடைபெறும் தொழில்நிறுவனங்கள் இன்று ஒருநாள் தொழில் உற்பத்தியை நிறுத்தும் கதவடைப்பு போராட்டத்தால் 100 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுக - பாஜக இடையே மோதல் குறித்த கேள்விக்கு ; ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என உதயநிதி பதில்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion