மேலும் அறிய
Advertisement
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
1,000 கோடியில் நிதி ஒதுக்கப்பட்ட உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,” திராவிட முன்னேற்ற கழக மக்கள் விரோத அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றுகின்ற வகையிலும், மக்களின் நம்பிக்கையை இழக்கின்ற வகையிலும் அவர்களுடைய நடவடிக்கையை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7.5.2022 அன்று திமுக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற அந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கியமான கோரிக்கைகளை, 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப வேண்டும் என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறப்பினர்களுக்கும் முதலமைச்சர் கடிதம் அனுப்பினார்.
இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், நம்மை நம்பி வாக்களித்தவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும், உடனடியாக அந்த பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து எனது திருமங்கலம் தொகுதியில் நிறைவேற்றும் பணிகளான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவ பணியை விரைந்து முடிக்க வேண்டும் , கல்லுப்பட்டி பகுதியில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய டோராபாறை அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் கட்டப்பட வேண்டும், கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய அணை கட்ட வேண்டும்,
கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள சின்ன உலகானி, கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு பகுதிகளில் நிரந்தர குடிநீர் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு தண்ணீர் கிடைத்திட நிலையூர் நீட்டிப்பு கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருமங்கலம், ராஜபாளையம் சாலையை நான்கு வழிசாலையாக மாற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடந்த 10.9.2022 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் கொடுத்தேன் இதை கொடுத்து பிறகு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
கிணற்றில் போட்ட கல்:
இதிலே ஆயிரம் கோடி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். அப்படிப் பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது? இந்த அரசு வெறும் அறிவிப்பு வெளியிடுகிற அரசாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறது. அதற்காக செயல் வடிவம் கொடுப்பதிலே இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. இந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
பல்வேறு துறைகளுக்கு 37 குழுக்கள் அமைக்கப்பட்டது அந்த குழுக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அந்த 37 குழுக்களுடைய அறிவுரைகள் என்ன, செயல்பாடு என்ன தீர்வு கொடுத்திருக்கிறார்கள், என்ன ஆலோசனைகளை விவாதித்து உண்டா? மேலும் 520 தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வருகிறார்கள் . இதுகுறித்து எடப்பாடியார் இதன் அரசாணை விவரம் என்ன என்பதை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து எந்த விவரமும் வெளியிப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றுவதில் 100 சதவீதம் தோல்வி அடைந்திருக்கிறது. எடுத்த காரியங்கள் எல்லாம் அறிவிப்போடு நின்று விடுகிறது அதுதான் திமுக அரசின் அடையாளம். ஆகவே 1000 கோடியில் அறிவிக்கப்பட்ட உங்கள் முதலமைச்சர் திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?”. என கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion