மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு
கீழடி அருங்காட்சிய பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும். கீழடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர்.
கீழடி அருங்காட்சிய பணிகள் மே 31க்குள் நிறைவுபெறும். கீழடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டி அளித்தார். அவருடன் அமைச்சர் மூர்த்தி, கே.ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உடன் இருந்தனர்.@evvelu | @OfficeOfKRP | @pmoorthy21 | @TamilarasiRavi3 pic.twitter.com/iCY2UFJwbO
— Arunchinna (@iamarunchinna) March 25, 2022
கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. இன்னிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சிய பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா. வேலு, பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப் பொருள்கள் காட்சிப்படுத்த ரூபாய் 11 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக பணிகள் வரும் மே 31ஆம் தேதிக்குள் நிறைவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 15% விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும், முதல்வரின் நம்மை காப்போம் 48 என்ற திட்டத்தின்படி கடந்த மூன்று மாதங்களில் சாலை விபத்தில் சிக்கிய 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை கணக்கெடுக்கும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர், முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் மத்திய அமைச்சரை சந்தித்து கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.