(Source: ECI/ABP News/ABP Majha)
TN Govt Bus: அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம்..! கிளம்பிய எதிர்ப்பால் நிபந்தனை நீக்கம்
இந்த நிபந்தனைகளில், ஹோட்டலுக்கான டெண்டர் விண்ணப்பத்தில் சைவ உணவே தயாரிக்க வேண்டும் என இருந்ததால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
சைவ உணவகங்களில் மட்டும் அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.
சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்றும், கழிவறை வசதி இலவசமாக இருக்க வேண்டும் எனவும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழ்நாடு அரசு நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிபந்தனைகளில், ஹோட்டலுக்கான டெண்டர் விண்ணப்பத்தில் சைவ உணவே தயாரிக்க வேண்டும் என இருந்ததால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அரசுப் பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டதாக தமிழ்நாடு தெரிவித்துள்ளது. அசைவ உணவகங்களிலும் பேருந்துகள் நின்று செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#JUSTIN | அரசு பேருந்துகள் அசைவ உணவகங்களிலும் நின்று செல்லலாம் - போக்குவரத்துத்துறை https://t.co/wupaoCQKa2 | #TNSTC #TNGovt #Hotels pic.twitter.com/TaOIITgYbf
— ABP Nadu (@abpnadu) March 25, 2022
முன்னதாக, அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள நிபந்தனைகள்: உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும்.
பயணிகள் குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
நெடுஞ்சாலையோர உணவகங்களில் கழிப்பிட வசதி கட்டாயம் இலவசமாக இருக்க வேண்டும்.
பேருந்தில் பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
உணவக வளாகத்தில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.
உணவகத்தில் விற்கப்படும் உணவுப்பொருள்களின் விலைப்பட்டியல் பயணிகளுக்குத் தெளிவாகக் கண்ணில்படுபடி விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட வேண்டும். உணவுப்பொருள்களின் விலை, MRP விலையைவிட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
அனைத்து உணவகங்களிலும் கண்டிப்பாக புகார்ப்பெட்டி இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்