மதுரை மாநகராட்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கணவர்; அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் சர்ச்சை
மதுரை மாநகராட்சி பணிகளை மேயர் மற்றும் மண்டலத்தலைவரின் கணவர்கள் நேரில் ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் சர்ச்சை.
உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு என கூறி பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தி.மு.க., நிர்வாகிகள் அவர்களது மனைவி, தாயார் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு வாய்ப்புகளை பெற்று வெற்றிபெற வைத்தனர். பின்னர் தலைவர்களாக பல்வேறு பதவிகளில் பெண் உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் தொடர்ச்சியாக பெண் மேயர்கள், நகராட்சி, ஊராட்சி , மண்டக்குழு தலைவர்கள் போன்ற பதவிகளில் உள்ள பெண் தலைவர்களை செயல்படவிடாமல் அவர்களது கணவன்மார்களும், குடும்பத்தினரும் அரசு பணிகளில் தலையிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு சார்பில் பெண் தலைவர்களின் செயல்பாடுகளில் கணவரோ, உறவினர்களோ தலையிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடந்து வரும் பணிகளை மேயரின் கணவர் பொன்.வசந்த், மத்திய மண்டல தலைவரின் கணவர் மிசாபாண்டி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் மாநகராட்சி பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவுகிறது.@abpnadu pic.twitter.com/emW7MQko15
— arunchinna (@arunreporter92) October 5, 2022