மேலும் அறிய
ஆயிரம் சொல்லுங்க.. 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் - செல்லூர் ராஜூ உறுதி
தவெக, நடிகர் விஜய் விமர்சனத்தை நாங்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை - மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

செல்லூர் ராஜூ நிகழ்ச்சியில் பதனி அருந்தினார்
Source : whats app
கருத்துக் கணிப்பு எல்லாம் தூள் தூளாக மாறிவிடும். மக்கள் தான் எஜமானர்கள். 1000 கருத்துக்கணிப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தினமணி தியேட்டர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கூட்டணி என்பது எடப்பாடி பழனிச்சாமி சொன்னது தான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற அவருக்கு தெரியும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஆளுங்கட்சியை விரல் விட்டு ஆட்டிக் கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் கேட்கின்ற கேள்விகளுக்கு தவறான பதில்களை முதலமைச்சரும், அமைச்சர்களும் சொல்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் சபையின் மாண்பை காப்பாற்றினார்களா? சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துவிட்டு ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்கள்.
E.P.S - செங்கோட்டையன் ஏன் தனித்தனியாக அமித்ஷா வை சந்திக்க வேண்டும் என்ற கேள்விக்கு
ஏன் தனித்தனியாக சந்தித்தீர்கள் என செங்கோட்டையனிடம் கேளுங்கள். அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகி மதிக்கக்கூடியவர், மதிக்ககப்பட்டவர். செங்கோட்டையன் அவரது கருத்தை சொல்லியுள்ளார். E.P.S யிடம் - செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா? இல்லையா? எனக்கு தெரியாது. செங்கோட்டையன் கூட்டணி தொடர்பாக பேசினார் என்று செய்திகள் வந்ததா? அதிமுக பிரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஒன்றிரண்டு பேர் போவது வழக்கமான ஒன்று. ஒரு தலைவர் சென்றால் அவர் பின்னால் 4 பேர் இருப்பார்கள்.
கருத்துக் கணிப்பு தூள் தூளாகிவிடும்
C - Voter கருத்துக் கணிப்பில் முதலமைச்சராக வருவது தொடர்பாக மு.க.ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமிக்கு குறைவாகத்தான் போட்டுள்ளார்கள். இதுக்கு பெயர் தான் ஊடு சால் என்பது. அதிகமாக போட்டால் நம்ப மாட்டார்கள் என்று குறைவாக போட்டுள்ளார்கள். கருத்துக் கணிப்பு தூள் தூளாகிவிடும். மக்கள் தான் எஜமானர்கள். நான் அமைச்சர் மூர்த்தி பற்றி தரக்குறைவாக பேசியதாக அவர் சொல்கிறார். நான் எந்த இடத்திலாவது அவர் பெயரை பயன்படுத்தினேனா? அமைச்சர் மூர்த்தி தேவையில்லாமல் ஒரு அனுதாபத்தை தேட பார்க்கிறார். மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெறுவதற்கு அனுதாபமாக பேசுகிறாரா என்று தெரியவில்லை.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிக்கு தான் போட்டி என முதலமைச்சரின் கருத்துக்கு
எங்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள். எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள். நீங்கள் தான் ராஜா மாதிரி இருக்கிறீர்கள் அல்லவா? ராஜாவாக போகிறீர்களே? உங்கள் மன்னராட்சி தானே நடைபெறுகிறது. ஏன் இப்படி பயப்பட வேண்டும். திருமாவளவன் மனம் புழுகி போயுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு திமுகவை பற்றி பேசாமல் உள்ளதா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 1000 கருத்துகணிப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். த.வெ.க விமர்சனத்தை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை
அமித்ஷா திமுக என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு
தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லை. ஸ்டாலின் காங்கிரஸ் என்று சொல்வதா? செல்வப்பெருந்தகை ஒருமுறையாவது ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே பற்றி பேசியுள்ளரா? ஸ்டாலின் போல், ஸ்டாலின் போல் என்று பேசுகிறார். நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கொள்கையில் நாங்கள் சரியாக தான் உள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சரியாக உள்ளார்" என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















