Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 14th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இன்றே கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை அளிக்க தமிழ்நாட்டில் இன்றே கடைசி நாள். வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. முன்னதாக 11ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோளை ஏற்று 2வது முறையாக 14ம் தேதி வரை நீட்டிப்பு
பேருந்து கவிழ்ந்து விபத்து
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி, கவிழ்ந்து விபத்து; 40 பேர் காயம். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு; விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி மாநாடு
திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல | நிர்வாகிகள் மாநாட்டில் உரையாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
பைனலில் இந்தியா
சென்னையில் நடக்கும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இன்று மாலை நடக்கும் இறுதிப் போட்டியில் ஹாங்காங் சீனா அணியை இந்தியா எதிர்கொள்கிறது
காங்கிரஸ் ஆர்பாட்டம்
வாக்குத் திருட்டுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம். கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு. வாக்குத் திருட்டுக்கு எதிராக பெறப்பட்ட 5.5 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் முர்முவிடம் ஒப்படைக்க காங்கிரஸ் கட்சி நேரம் கேட்பு.
உளவாளி கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில், அசாமில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி குலேந்திர சர்மா கைது. சமூக ஊடகங்கள் வழியாக பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு முக்கியமான ஆவணங்களையும் தகவல்களையும் பகிர்ந்தது தெரியவந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல்.
காசா பேரழிவு
காசாவில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் பேரழிவை ஏற்படுத்தி வருவதாக UNICEF அமைப்பு வேதனை. மனிதானிமான உதவிகள் வருவது தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுவதால், சத்தான உணவுகள் கிடைக்காமல் காசா மக்கள் வாடுவதாகவும் தெரிவித்துள்ளது.
விடைபெற்றார் ஜான் சீனா
WWE மல்யுத்தத்தில் தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா.
கன்தர் உடன் இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் டேப் அவுட் முறையில் தோல்வி அடைந்தார் சீனா. கடந்த 23 ஆண்டுகளாக WWE போட்டிகளில் ஆடியுள்ள அவர் 17 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
4 பேர் பலி
தென் ஆப்பிரிக்கா : குவாசுலு-நடால் மாகாணத்தில் 4 மாடி கோயில் இடிந்து விழுந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு. கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது, திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து.
வெற்றி யாருக்கு?
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோத உள்ள 3வது டி20 போட்டி தர்மசாலா மைதானத்தில்
இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், 3வது போட்டியில் இந்தியா வெல்லுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.





















