மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( அக்டோபர் 23, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
(காலை 9:00 மாலை 5:00 மணி)
மேலுார், தெற்குதெரு, டி. வல்லாளப்பட்டி, பெரிய, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம் பாறைபட்டி, நாவினிபட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி.
(காலை 9:00 - மதியம் 2:00 மணி)
தே.கல்லுப்பட்டி, ராம்நகர், ராமுணிநகர், பாலாஜிநகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னி வேலம்பட்டி, தே. குன்னத்துார், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம்.சுப்பலாபுரம், வில்லுார், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்னரெட்டிபட்டி, ஆவுடையாபுரம், மத்தக்கரை பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், எம். புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லுார், சித்துார், ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, பாரமவுன்ட் மில் ஏரியா, பவுடர் கம்பெனி, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி பகுதிகள்.
பேரையூர்
பேரையூர், சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம் பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, ச.பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனுாத்தாம் பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டப் புலி, வாழைத்தோப்பு.
இலந்தைகுளம் - (காலை 9:00 மாலை 5:00 மணி)
இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம்நகர், பிகேபி நகர் ஆதீஸ்வரர், டிஎம் நகர் பின்புறம், வி.என் சிட்டி, கிளாசிக் அவென்யூ, தாசில்தா நகர், அண்ணமலையார் பள்ளி, ஆவின்நகர், ஜீப்பிலி டவுன், மருதுபாண்டியன் நகர், யாகப்பா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.