மேலும் அறிய
பணி நேரத்தில் விஜயை பார்க்கசென்ற காவலர் - அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆணையர்
காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விஜயை காணவந்த காவலர்
Source : whats app
சித்திரைத் திருவிழாவில் பாதுகாப்பில் இருந்த காவலர் கதிரவன் மார்க்ஸ், த.வெ.க., தலைவர் விஜயின் கட்சிக்காரராக மாறி மாலை அணிவித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை வந்த விஜய்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று முன்தினம் மதியம் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அவரைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அன்று காலை முதலே மதுரை விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விமான நிலைய நுழைவு வாயிலேயே விஜய் ரசிகர்களை தடுத்து நிறுத்தி பயணிகளை மட்டும் உள்ளே அனுப்பினர். அப்போது காவல்துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இருபுறமும் அணிவகுத்து நின்று தலைவர் விஜயை பார்ப்பதற்கு உற்சாகத்துடன் காத்திருந்தனர்.
படப்பிடிப்பு பணியில் விஜய்
14 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வந்த நடிகர் விஜய் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலைய வளாகத்தில் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் ஏறிய நடிகர் விஜய் விமான நிலைய வெளிப்புற சாலை வரை வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு கையை அசைத்து வந்தார். இருபுறமும் மலர் தூவி விஜயை வரவேற்றனர். அதைத்தொடர்ந்து இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கொடைக்கானல் தாண்டிக்குடி சென்றார். தற்போது அங்கு படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் பணி நேரத்தில் விஜயை பார்க்க கட்சித் தொண்டனாக பார்வையிட வந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம்
மதுரை மாநகர் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ் என்பவர் விளக்குத்துாண் காவல்நிலையத்தில் நேற்றுமுன் தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையம் வந்த த.வெ.க., தலைவர் விஜய் பார்ப்பதற்காக பணி நேரத்தில் அவசரகால அனுமதி கேட்டு சென்றுள்ளார். அவர் சீருடை இல்லாமல் கட்சிக்கொடியை அணிந்தபடி விஜயை வரவேற்றதோடு, மாலையும் அணிவித்து வழியனுப்பி வைத்த வீடியோ வெளியானது. இந்நிலையில் காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















