மேலும் அறிய
பழனிசாமிதான் திமுகவின் வெற்றி ரகசியம்: உதயநிதி ஸ்டாலின் சொன்னதன் பின்னணி என்ன? - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக, முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும் - டிடிவி தினகரன்.

டிடிவி - தினகரன்
Source : whats app
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தங்கு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டுவது குறித்த எடப்பாடியின் பேச்சு குறித்து பதிலளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு ?
தேவர் திருமகனாரின் பெயர் மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும்., தேவர் பெருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பதை எங்களது தேர்தல் வாக்குறுதியிலே சொல்லி இருக்கிறோம். இந்த நேரத்தில் நயவஞ்சகத்தனமாக பழனிசாமி எப்படி போன தேர்தலுக்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீதத்தை அறிவித்து, ஏழரைத்தனமாக செய்தது அரசியல் தவறு. தென் தமிழ்நாட்டில் உள்ள வாழ்கின்ற 105 சமூக மக்கள் பொங்கி எழுகின்ற சூழ்நிலை உருவானது. சமூக அமைதி கெடுக்கின்ற அளவிற்கு போராட்டங்கள் நடைபெற்றது. பழனிச்சாமி இங்கு வரும்போது எல்லாம் அவருக்கு எதிராக எப்படி எல்லாம் கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த கருத்துக்களின் அடிப்படையில் நான் சொன்னதை ஏதோ பழனிச்சாமி சொன்னதற்கு எதிர்த்து சொன்னதை, அரசியலுக்காக சொன்னதாக சிலர் தவறாக புரிந்து கொண்டு தூண்டப்பட்டு செய்திருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அவர் அரசியல் செய்கிறார்
தேர்தல் வெற்றி தோல்விகளை எல்லாம் தாண்டி மக்களின் நலனிலே அக்கறை கொண்ட இயக்கம் எங்கள் இயக்கம். அதுபோல எந்த ஒரு சமரசமும் இன்றி யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும். என்பதிலேயே நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது பழனிச்சாமி மத்திய அரசிடம் வைத்து இந்த கோரிக்கையை வைத்து நிறைவேற்றப்படும் வேண்டும். மத்திய அரசு தேவர் திருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் வைக்கப்பட வேண்டும். என இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அதை வைத்து தேர்தல் நேரத்தில் அவர் அரசியல் செய்கிறார், என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். துணை முதல்வர் உதயநிதி அவர்கள் அருமையான கருத்தை சொல்லியிருக்கிறார்கள். எங்களது வெற்றியின் ரகசியமே பழனிச்சாமி தான், பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும். அவர் நூறாண்டுகள் வாழ வேண்டும். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் வெற்றி எங்களுக்கு சுலபம் என சொல்கிறார். அவர்களுக்கு கூட்டணி என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பழனிச்சாமி என்பதுதான் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் என்பதை சொல்லி இருக்கிறார்.
திமுகவிற்கு தெரிவது பாஜகவிற்கு தெரியாதா? என்ற கேள்விக்கு
அம்மாவின் கட்சி நன்றாக இருக்க வேண்டும் வருங்காலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோரின் கருத்து ; அவர்களை அனுபவமிக்கவர்களாக மற்ற மாநிலங்களிலே சிறப்பாக செயல்படக்கூடிய தமிழ்நாட்டிற்கு தேவையானது எது என்பதை நிச்சயம் உணர்ந்து இருப்பார்கள் என்று சொல்கிறேன். திமுக வெற்றி பெறுவதற்கு திமுக கூட்டணி பலத்தை தாண்டி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளராக இருப்பதுதான், எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு என சொல்வதிலிருந்தே 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து திமுக வெற்றிக்கு காரணம் பழனிச்சாமி என்று சுயநல நயவஞ்சக மனிதர் தான் என்பதை தான் கிளியராக தெரிகிறது.
பழனிசாமிக்கு அமோக ஆதரவு உள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு
அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் ; அவர் ஏதோ பழனிச்சாமிக்கு வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லியிருக்கிறார் அவர் இருந்தால் சுலபமாக இருக்கும் என்கிறார். 2019 ல் இருந்து சுலபமாக வெற்றி பெற்றார்கள் என்கிறார். 2024 மிக சுலபமாக வெற்றி பெற்றதாக அவர்கள் தைரியமாக பேசுவதற்கான காரணம் பழனிச்சாமி என்கிற ஒற்றை மனிதர் தான். அதனால் அங்கு இருந்து கொண்டு தூங்குவது போல நடிப்பவர்களை நம்மால் எழுப்ப முடியாது. பிரதான எதிர்க்கட்சிக்கு ஆளும் கட்சி சொல்கிறது, அதை நான் எல்லோருக்கும் சொல்கிறேன். ஒற்றுமை என்ற பெயரை வைத்து கொண்டு பிளவு ஏற்படுத்துபவர்களை அம்மாவின் ஆத்மா சும்மா விடாது” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















