மேலும் அறிய
மீனாட்சியம்மன் கோயில் அருகே ஆடு வெட்டக் கூடாது என சொல்லவில்லை.. ஆனால் நாங்கள் சொல்வது இது தான் !
ஆடு வெட்டக்கூடாது கோழி வெட்டக்கூடாது என்று கோரிக்கை வைக்கவில்லை. அவர்கள் பாரம்பரிய முறையை கடைபிடிக்கலாம் - இந்து மக்கள் கட்சி நிர்வாகி.

இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன்
Source : whats app
ஆனி மாதம் மாசி மாதங்களில் சாமி கும்பிட்டு கிடாய் வெட்டும் பழக்கம் எங்களிடம் உள்ளது என்று கோயில் நிர்வாகியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மீனாட்சியம்மன் கோயில் அருகே ஆடு வெட்டியதாக சர்ச்சை
மதுரை திருப்பரங்குன்றம் மலையை மையப்படுத்தி பல்வேறு சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மேற்கு கோபுரம் அருகில் ஆடு வெட்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகி, கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சங்கிலிக் கருப்பு மற்றும் சப்பானிக் கருப்பு சாமிக்கு பலியிடப்பட்ட ஆடுகளை வீட்டின் மாடியில் வைத்து உரித்த நிகழ்வை தவறாக திரித்து, கோபுரத்தையும் ஆடு உரிப்பதையும் சம்பந்தப்படுத்துவது போல வீடியோ வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சங்கிலிக் கருப்பு மற்றும் சப்பானிக்கருப்பு ஆடு பலியிடப்பட்டது
இந்த சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்றோம். மேற்கு கோபுரத்திற்கு எதிரே உள்ள வலதுபுரம் உள்ள சந்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. இதனை சிவராமன் என்பவர் வழிபட்டு அருள் வாக்கு சொல்வதாக நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் வைத்து எங்கல் குலசாமியான சங்கிலிக் கருப்பு மற்றும் சப்பானிக் கருப்பிற்கு பூஜை செய்து வழிபட்டு வருகிறோம். பொதுமக்களும் இங்கு வந்து வழிபாடு செய்வார்கள். பரமக்குடியில் தான் எங்களுடைய குலதெய்வம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இங்கு சாமி கும்பிட்டு வருகிறோம். ஆனி மாதம் மாசி மாதங்களில் சாமி கும்பிட்டு கிடாய் வெட்டு பழக்கம் எங்களிடம் உள்ளது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இந்த சூழ்நிலையில் எப்போதோ ஆனி மாதம் 31 ஆம் தேதி கிடாய் வெட்டியதனை தவறாக, கோயில் பகுதியில் ஆடு வெட்டப்படுவது போல யாரோ வீடியோ எடுத்து போட்டுள்ளனர்.
மன வருத்தம் பேட்டி வேண்டாம்
வீட்டுக்கு கீழே தான் கோயில் உள்ளது. அங்கு பலியிடப்பட்ட 2 ஆடைத்தான் மாடி மேலே கொண்டு சென்று உரித்தோம். இதில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லை. இது தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்யப்படும் வழிபாட்டு முறைதான். காவல் தெய்வம் வழிபாட்டு சடங்கு இது. அதிகாரிகள் எங்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் குடும்பத்தில் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளோம். மாற்றி, மாற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. எங்களுக்கு மனச் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. அதனால் நாங்கள் பேட்டியளிக்க விரும்பவில்லை என நம்மிடம்.
நாங்கள் சொல்வது இது தான் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தெரிவிப்பது என்ன?
மேலும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்த இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணனிடம் பேசினோம் அப்போது அவர் கூறுகையில்...,” ஆடு வெட்டப்பட்ட வீடியோ தொடர்பாக தெரிந்துகொள்ள புகார் அளித்தேன். நாங்கள் ஆடு, கோழி வெட்டுவதை தடுக்க முயற்சி எடுக்கவில்லை. அது அவர்களிடம் வழிபாட்டு முறையில் ஒன்று. இதில் தலையிடவில்லை. குல தெய்வ வழிபாட்டில் ஆடு வெட்டி பலியிட்டுள்ளனர். மேலும் அன்னதானத்திற்காக ஆடு உரித்துள்ளனர். அதனை ஒரு மறைவாக செய்ய வேண்டும் என்று தான் கெட்டுக் கொண்டுள்ளோம். ஏனென்றால் மீனாட்சி அம்மன் கோயில் அருகிலேயே உள்ளது. அதனால் அதை ஒரு கொட்டகையோ, தகரமோ போட்டு மறைவாக ஆடு உரித்துக் கொள்ள கேட்டுள்ளோம். இதில் வேறு எதுவும் சர்ச்சை இல்லை. ஆடு வெட்டக்கூடாது கோழி வெட்டக்கூடாது என்று கோரிக்கை வைக்கவில்லை. அவர்கள் பாரம்பரிய முறையை கடைபிடிப்பது தவறில்லை” என்று தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மதுரை எய்ம்ஸ் பணி எவ்வளவு முடிஞ்சிருக்கு தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















