மதுரை மாநகர் தாசில்தார் அன்பு நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்த பாண்டியன் மருத்துவ சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் பாண்டியன் தனது மனைவி வாசுகி மற்றும் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகியோருடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் பாண்டியன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில் பாண்டியனின் மனைவி வாசுகி மற்றும் திருமணமாகாத நிலையில் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகிய மூவரும் தனியாக வசித்துவந்துள்ளனர். பாண்டியன் பிரிந்துசென்ற விரக்தியில் இருந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.
![தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்த பரிதாபம்; வறுமையால் தற்கொலை செய்த அரசு உயரதிகாரி குடும்பம் - மதுரையில் சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/9d1ff7cfbcd219c08433e19d7c7857571692332010877184_original.jpeg)
இதன் காரணமாக வீட்டிற்குள்ளயே இருந்த காரணமாக உரிய வருமானமின்றி வீட்டில் பணத்தை செலவு செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று அந்த பணத்தில் இருந்து சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உணவிற்கு வழியின்றி வறுமை ஏற்பட்டுள்ளது இதனால் மின் கட்டணம் செலுத்தாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருட்டிலயே வசித்துவந்துள்ளனர். மேலும் வீட்டில் மோட்டார் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் இன்றி இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல முடியாதநிலையில் வசித்துவந்ததோடு அவ்வபோது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடிநீரை வாங்கி அதனை குடித்தே வாழ்ந்துவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீரும் வாங்காத நிலையில் வீடு பூட்டியே கிடந்துள்ளது.
![தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்த பரிதாபம்; வறுமையால் தற்கொலை செய்த அரசு உயரதிகாரி குடும்பம் - மதுரையில் சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/00caaf48eebc97e9a4ee3da658ebbe9b1692332094785184_original.jpeg)
இதனையடுத்து நேற்று வீட்டை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் அண்ணாநகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தபோது கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், வாசுகி மற்றும் உமாதேவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குறித்து தடயவியல் கைரேகை நிபணர்கள் ஆதாரங்களை எடுத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சினேகபிரியா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அழுகிய நிலையில் இருந்த மூன்று சடலங்களையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்தி படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai HC: கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்; சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இல்லை - நீதிபதிகள் வேதனை