மேலும் அறிய
Advertisement
Madurai HC: கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்; சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இல்லை - நீதிபதிகள் வேதனை
மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை-நீதிபதிகள்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாபநாசம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பொதிகை மலை உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆற்று நீர் மூலம் மூன்று வகையான சாகுபடிகள் நடக்கின்றன. இந்த ஆற்றின் குறுக்கே எட்டு அணைக்கட்டுகள் உள்ளன.
தாமிரபரணி பாசனம் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் பாசனம் செய்யபடுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து வடக்கு கொடைமேலழகன் கால்வாய், தெற்கு கொடைமேலழகன் கால்வாய், நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் கால்வாய் வழியாக 18,090 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 3015 மில்லியன் அடி தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாசனத் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, நெல் சாகுபடியும் பாதிப்படைந்தது. கிட்டத்தட்ட 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் விவசாய செய்வதறியாமல் உள்ளன. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வடக்கு கொடைமேலழகன் கால்வாய், தெற்கு கொடைமேலழகன் கால்வாய், நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் கால்வாய்களில் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஏற்கனவே நீர்நிலைகளை பாதுகாக்க நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நதிகளை இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் இது போன்ற பிரச்சனை இருந்திருக்காது. மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் ஏற்கனவே இது தொடர்பான தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த வழக்கையும் சேர்க்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - முதலமைச்சரே நேரில் சந்தித்து பாராட்டிய மதுரைக்காரர்; யார் இவர்...? என்ன காரணம்?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Independence Day 2023 Special: விடுதலைக்கு வித்திட்ட சிவகங்கை சீமை; தென் பகுதியின் வீர வரலாறு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion