சுத்தப்படுத்தும்போது வெடித்த துப்பாக்கி; முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு - மதுரையில் சோகம்
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெத்தானியபுரத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது எதிர்பாராமல் கைப்பட்டு சுட்டதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் வீதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன். இவர் 23 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 2008 -ம் ஆண்டு ஓய்வு பெற்று தற்போது தனியார் வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் நிரப்பும் வாகனத்தின் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தனியார் வங்கியில் கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாததால் துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக இன்று காலை தனது வீட்டு மொட்டை மாடியில் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக கைப்பற்று வயிற்று பகுதியில் சுட்டுக் கொண்டார்.
இதை அறிந்த குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு ஆட்டோவில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து வந்த கரிமேடு காவல்துறையினர் அவர்களது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் துப்பாக்கியில் சுட்டதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.