மதுரையில் கனமழையால் வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சோகம்
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மீது சுவர் விழுந்தது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலுக்கு பின் மழை
கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஓரிரு தினங்களாக தென் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் ஓரிரு தினங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் இன்றும் மழை பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த மழை அறிவிப்பு
குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பரவலாக பெய்யும் என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழையில் வீடு இடிந்தது