Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
வைகாசி மாதத்தில் எத்தனை சுபமுகூர்த்த தினம் உள்ளது? எந்தெந்த கிழமையில் வருகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம். நடப்பாண்டிற்கான வைகாசி மாதம் கடந்த 14ம் தேதி பிறந்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரை மாதத்தில் சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இதன் காரணமாக, சித்திரை மாதத்திற்கு அடுத்து வரும் வைகாசி மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான திருமண வைபோகங்கள் உள்பட ஏராளமான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டிற்கான வைகாசி மாதம் கடந்த 14ம் தேதி பிறந்தது. இதையடுத்து, வைகாசி மாதத்தில் சுப நிகழ்வுகளை நடத்த பலரும் தயாராகி வருகின்றனர். திருமணம் மட்டுமின்றி, சீமந்தம், புதுமனை புகுதல், காதணி விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இந்த வைகாசி மாதத்தில் நடப்பது வழக்கம்.
வைகாசி மாதத்தில் எத்தனை சுபமுகூர்த்த நாட்கள் உள்ளது? எந்தெந்த நாட்களில் அவை வருகிறது? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
வைகாசி மாதத்தில் மொத்தம் 7 சுபமுகூர்த்த நாட்கள் உள்ளது.
முதல் சுபமுகூர்த்தம்:
தேதி - மே 19ம் தேதி ( வைகாசி 6)
கிழமை – ஞாயிற்றுக்கிழமை
திதி - ஏகாதசி
பிறை - வளர்பிறை
லக்கினம் - மிதுனம்
யோகம் - அமிர்த யோகம்
நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
நட்சத்திரம் - அஸ்தம்
2வது சுபமுகூர்த்தம்:
தேதி - மே 26ம் தேதி
கிழமை - ஞாயிறு
பிறை - தேய்பிறை
நட்சத்திரம் - மூலம்
லக்கினம் - மிதுனம்
நல்ல நேரம் - காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
திதி - திருதியை
யோகம் - அமிர்த யோகம்
3வது சுபமுகூர்த்தம்:
நாள் - ஜூன் 2ம் தேதி
கிழமை - ஞாயிறு
பிறை - தேய்பிறை
லக்கினம் - மிதுனம்
யோகம் - அமிர்தம்
திதி - ஏகாதசி
யோகம் - அமிர்தம்
நல்ல நேரம் - காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
4வது சுபமுகூர்த்தம்:
நாள் - ஜூன் 3ம் தேதி
கிழமை - திங்கள்
பிறை - தேய்பிறை
நட்சத்திரம் - அஸ்வினி
லக்கினம் - ரிஷபம்
யோகம் - சித்த யோகம்
திதி - துவாதசி
நல்ல நேரம் - காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
5வது சுபமுகூர்த்தம்:
நாள் - ஜூன் 9ம் தேதி
கிழமை - ஞாயிறு
லக்கினம் - மிதுனம்
பிறை - வளர்பிறை
திதி - திருதியை
நட்சத்திரம் - புனர்பூசம்
யோகம் - சித்த யோகம்
நல்ல நேரம் - காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
6ம் சுபமுகூர்த்த நாள்:
நாள் - ஜூன் 10ம் தேதி
கிழமை - திங்கள்
லக்கினம் – ரிஷபம்
நட்சத்திரம் - பூசம்
பிறை - வளர்பிறை
யோகம் - சித்த யோகம்
திதி - சதுர்த்தி
நல்ல நேரம் - காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
7வது சுபமுகூர்த்தம்:
நாள் - ஜூன் 12ம் தேதி
கிழமை - புதன் கிழமை
பிறை - வளர்பிறை
நட்சத்திரம் - மகம்
திதி - சஷ்டி
லக்னம் - கடகம்
யோகம் - சித்த யோகம்
நல்ல நேரம் - காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை