நலத்திட்ட நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த அமைச்சர்; மழையில் நனைந்தபடி காத்திருந்து பெற்றுச் சென்ற மாணவிகள் !
காத்திருந்து அமைச்சர் வந்ததும் நலத்திட்டங்களை பெற்று கொண்டு அவசர அவரசமாக தங்களது வீடுகளுக்கு பெற்றோர்களுடன் மாணவிகள் சென்றனர்.

உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாள் விழா
தாமதமாக வந்த அமைச்சர் - மழையில் நனைந்த மாணவிகள்
மாகப்பூபாளையம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நோட்டு, பேனாக்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக மதுரையில் பரவலாக மழை பெய்த நிலையில், பள்ளி முடிந்தும் நலத்திட்டம் வழங்க வேண்டி மாலை 6 மணி வரையில் மாணவிகள் காத்திருந்து பின்னர் அமைச்சர் வந்ததும் நலத்திட்டங்களை பெற்று கொண்டு, அவசர அவரசமாக தங்களது வீடுகளுக்கு பெற்றோர்களுடன் சென்றனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3 மணிக்கு விழாவிற்கு வருவதாக இருந்த சூழலில் விமானத்தில் வருவது தாமதம் ஏற்பட்டு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாக கூறப்பட்டது.






















