மேலும் அறிய
மதுரையில் பள்ளி மாணவர்களின் நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் பரிசு.. - மேலும் மதுரை செய்திகள் !
மாணவர்களின் நேர்மையான செயலை பாராட்டி காவல் ஆய்வாளர் சுரேஷ் சால்வை அணிவித்து பேனா பரிசாக வழங்கினார். மேலும் அவர்களுடன் சக மாணவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை திருநகர் பகுதியில் சேர்ந்த முகமது ஆசிப் மற்றும் ஹரிஷ் இரு மாணவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் மணி பர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது இதனை கண்ட மாணவர்கள் யாருடையது என அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து பார்த்தனர் யாரும் தெரியாது எனக் கூறியதை தொடர்ந்து அருகில் உள்ள திருநகர் காவல் நிலையத்தில் மணிப் பர்ஸை ஒப்படைத்தனர்.
இதனைக் கண்ட திருநகர் காவல் ஆய்வாளர் சுரேஷ் மணிப் பர்ஸில் உள்ள அடையாள ஆவணங்களை கொண்டு திருநகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது எனவே மணி பர்ஸை உரியவரிடம் காவல் நிலையம் வரவழைத்து ஒப்படைத்தனர். இந்த மாணவர்களின் நேர்மையான செயலை பாராட்டி காவல் ஆய்வாளர் சுரேஷ் சால்வை அணிவித்து பேனா பரிசாக வழங்கினார். மேலும் அவர்களது சக மாணவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் மதுரையில் நடந்த கிரைம் செய்திகள்
மதுரையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்கச்செயின் பறிப்பு !
மதுரை மாநகர் விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 32வயதான முத்துமாரி சாலையில் நடந்து சென்ற போது பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த சுமார் 5 சவரன் மதிப்பிலான தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிள்ளனர். இதுகுறித்து முத்துமாரி செல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காமராஜர் சாலை பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிய ஆறு பேர் கைது
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலை பகுதியில் பிரபல லாட்ஜில் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டு நடைபெற்று வருவதாக தெப்பக்குளம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் லாட்ஜில் தங்கி சீட்டு விளையாடிய செல்லூரை சேர்ந்த சக்திவேல் பாஸ்கர் துளசி மணிகண்டன் பாண்டி கௌதம் ஆகிய ஆறு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு மற்றும் 14,190 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து தெப்பக்குளம் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion