மேலும் அறிய

Madurai : மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா - சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

தற்போது முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறும் என்பது ஐதீகம். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையானது  புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறும். இதனை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோயிலில் இருந்து புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு கோயிலுக்கு வந்தடைவர்.

தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா 
 
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி  உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவில் கடந்த 6 நாட்களாக சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது , பொற்கிழி அளித்தது, பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ஆகிய சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நாள்தோறும்  சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.  

- ராமநாதபுரம் இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் இவ்வளவு ஏற்பாடுகளா? - பாதுகாப்பு பணியில் போலீஸ் கெடுபிடி !

சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரம்

இந்நிலையில் 7ஆம் நாள் சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் எழுந்தருளி சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். இதையடுத்து  ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், கும்ப லக்கனத்தில் கோயிலில் உள்ள சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில்  நடைபெற்றது. அதில் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன் சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ஆம் பிரகாரம் வலம்வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார்.  இதை தொடர்ந்து இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறும் என்பது ஐதீகம். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை

நாளை சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையானது  புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறும். இதனை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோயிலில் இருந்து புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு கோயிலுக்கு வந்தடைவர். அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 - 12 மணி வரையும், மதியம் 3 முதல் 8 மணி வரையும் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aadhaar Update: ஃபோன் போதுமே..! ஆன்லைனில் ஆதார் பெயர், பிறந்த தேதி, முகவரியை மாற்றுவது எப்படி? வழிமுறை இதோ..!

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget