Aadhaar Update: ஃபோன் போதுமே..! ஆன்லைனில் ஆதார் பெயர், பிறந்த தேதி, முகவரியை மாற்றுவது எப்படி? வழிமுறை இதோ..!
Aadhaar Update: ஃபோன் வாயிலாக ஆதார் கார்டில் தனிநபர் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Aadhaar Update: ஃபோன் வாயிலாக ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற விவரங்களை, அப்டேட் செய்யும் வழிமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அப்டேட் - செப்டம்பர் 14 தேதி வரை அவகசம்:
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு அனைத்து சேவைகளுக்கும், ஆதார் அட்டையை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. மக்கள் தங்கள் ஆதார் அட்டையில் செல்போன் எண், புகைப்படங்கள் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை மாற்ற விரும்பினால் அதற்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இதுவரை புதுப்பிக்கப்படாத நபர்கள் அதனை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபோன் வாயிலாக ஆன்லைனில் ஆதார் அடிப்படை தகவல்களை அப்டேட் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஃபோன் வாயிலாக ஆதார் அப்டேட்:
ஆன்லனில் ஆதார் அட்டையுடன் உங்களது செர்ல்ஃபோன் எண்ணை இணைத்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மட்டுமே ஆன்லைனில் மூலம் உங்களால் ஆதார் அப்டேட்டை மேற்கொள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு ஒடிபி எண் வரும். அதை வைத்து தேவையான அப்டேட்களை மேற்கொள்ளலாம்.
முகவரி மாற்றம் செய்வது எப்படி?
- முதலில், https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற இணையதளத்தில் நுழைந்து உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
- அடுத்து கீழே தோன்றும் கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்
- அதைத் தொடர்ந்து முகவரி மாற்றம் என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
- அடுத்து உங்களின் புதிய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான மேற்சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பியுங்கள்
- அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
- கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
- அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்
பிறந்த தேதியை திருத்தும் வழிமுறை:
- முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html இணையதளத்தில் நுழைந்து உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
- அடுத்து கீழே உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்
- ஒடிபிய பதிவிட்டு உள்நுழைந்த பிறகு பிறந்த தேதியை மாற்றுவதற்கான ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்.
- பிறகு சரியான பிறந்த தேதியை பதிவு செய்து கொள்ளுங்கள்
- அதன் பிறகு தேவையான சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்
- அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
- கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
- அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.
பெயர் மாற்றம் செய்வது எப்படி?
- முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற இணையதளத்தில் நுழைந்து உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
- அடுத்து கீழே உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- ஒடிபி மூலம் உள்நுழைந்து பெயர் மாற்றுவதற்கான ஆப்சன் க்ளிக் செய்யுங்கள். அதில் உங்கள் சரியான பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்
- அதன் பிறகு மேற்சொன்ன தேவையான சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்
- அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
- கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
- அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.
தந்தை அல்லது கணவர் பெயர் மாற்றுவது எப்படி?
- முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற இணையதளத்தில் நுழைந்து உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
- அடுத்து கீழே உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- அதை தொடர்ந்து அதில் முகவரி மாற்றம் என்பதை கிளிக் செய்யுங்கள்
- அதில் உங்கள் தந்தை பெயர்,மற்றும் உங்கள் முகவரியை கொடுத்து பின் அதற்கான மேல் சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
- கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
- அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.
ஆதார் நிலையை அறிவது எப்படி?
நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள். அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள https://resident.uidai.gov.in/check-aadhaar என்ற இணையதளத்தை அணுகவும்.அதில் URN எண் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.
அப்டேட்டிற்கு தேவையான ஆவணங்கள்:
- பிறப்பு சான்று
- கல்விச்சான்று
- பாஸ்போர்ட்
- பான்கார்ட்
- கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,
- குரூப்-ஏ நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்