ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி
ஜல்லிக்கட்டு போட்டிக்காக சாதி, மதம் பேதமின்றி 8 கிராம மக்கள் இணைந்து பணம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி Madurai Jallikattu competition 8 villagers gathered gave financial assistance of about 13 lakhs - TNN ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/27/4cb858c4eab4f46281389db0e7f650a21706358398753184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.
மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/27/784c063142d2de31cb353e6579263c351706358315485184_original.jpeg)
![ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/27/4cb858c4eab4f46281389db0e7f650a21706358398753184_original.jpeg)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)