Railway Madurai Division ; இந்தியாவில் மதுரைதான் ஃபர்ஸ்ட் ; அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடியது எதுக்கு தெரியுமா?
சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை கோட்டம் தொடர்ந்து இந்திய அளவில் முன்னிலை வகித்தி வருகிறது.
இந்த நிதியாண்டிலும் கடந்த செப்டம்பர் 15 வரை சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 40.45 கி.மீ. ஆக உயர்ந்து தொடர்ந்து, இந்திய அளவில் முதன்மை கோட்டமாக சாதனை புரிந்து வருகிறது.
இந்திய அளவில் ரயில் சேவை முக்கியமான ஒன்று
ரயில் சேவை என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்று. வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் என அனைத்துப் பகுதி மக்களும் ரயில் சேவையை அதிகளவு பயன்படுத்துகின்றனர். பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில்களை போல சரக்கு ரயில்களும் மிக முக்கிய பணிகளை செய்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் தட்டுப்பாடுகளை எளிமையாக குறைக்க முடிகிறது. இந்நிலையில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை கோட்டம் தொடர்ந்து இந்திய அளவில் முன்னிலை வகித்தி வருகிறது. இதனால் தொடர்ந்து மதுரை கோட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் இதற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது ரயில் விரும்பிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- “பருப்பு இல்லை, பாமாயில் இல்லை, இதைக் கேட்கக் கூட நாதியும் இல்லை” - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை கோட்டம் தொடர்ந்து முன்னிலை
இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் சரக்கு ரயில்களை மணிக்கு 38.62 கி.மீ. வேகத்தில் இயக்கி இந்திய அளவில் முதன்மை கோட்டமாக இருந்து வந்தது. இந்த நிதியாண்டிலும் கடந்த செப்டம்பர் 15 வரை சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 40.45 கி.மீ. ஆக உயர்ந்து தொடர்ந்து, இந்திய அளவில் முதன்மை கோட்டமாக சாதனை புரிந்து வருகிறது. சரக்கு ரயில்களின் சராசரி வேகத்தில் பயணிகள் ரயில்களுக்கு வழி விடுவதற்காக நிறுத்தி வைக்கும் காலம், சரக்கு ரயில் கட்டமைக்கும் நேரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த சாதனையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
அதேபோல பயணிகள் ரயில்களையும் இந்த நிதியாண்டில் 168 நாட்களில் 108 நாட்கள் 100% காலம் தவறாமல் இயக்கி சாதனைப் புரிந்துள்ளது. இந்த சாதனையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கோட்ட ரயில்வே மேலாளரின் வார பாதுகாப்பு கூட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என். ராவ், வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் கே. ஹரிகுமார், முது நிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளர் வி. பிரசன்னா, முதன்மை கோட்ட பொறியாளர் எம். கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் மதுரை ரயில் கோட்டத்தில் பல்வேறு ரயில் சேவைகளில் சாதனைகள் செய்து, ரயில் பயணிகளுக்கு சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thirumavalavan: “ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?