மேலும் அறிய
Advertisement
”மறுபிறவின்னு ஒன்னு இருந்தா கலைஞர் குடும்பத்தில தான் பிறக்கணும்” - செல்லூர் ராஜூ யோசனை
நாங்கள் பனங்காட்டு நரி, சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம், நீ என்ன சுஜிபி, நீ ஒரு பொம்மை முதல்வர் இல்ல டம்மி முதல்வர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காரசார பேச்சு.
மறுபிறவின்னு ஒன்னு இருந்தா கலைஞர் குடும்பத்திலதான் பிறக்கணும் மகனாகவோ, பேரனாகவோ..! என்னமா வாழ்ராய்ங்க.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணா பிறந்தநாள் விழாவில்
மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு தொகுதி கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்., மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் எழுந்து செல்ல முற்பட்டதால், உடனடியாக மைக்கை பிடுங்கி யாராவது எழுந்து சென்றால் ரத்தம் காக்கி சாவிங்க என கூறி கலகலவென்று பேசினார். அப்போது கூட்டத்திற்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
என்னப்பா கைதட்டக்கூடாதா? - செல்லூர் ராஜூ கலகல
அப்போது அவர் பேசுகையில்,”தங்கச்சி தங்கச்சி வா இங்க..! உங்க காதை கொஞ்சம் கொடுங்க.! நீங்க எல்லாம் சீக்கிரமா வீட்டிற்கு போக வேண்டும், என்பதற்கு தான் எனக்கு மாலை மரியாதை கூட நிகழ்ச்சியை ஏற்படுத்தியவரிடம் இருந்து கூட வாங்கவில்லை. பொதுக்கூட்டத்தில் நாங்கள் பேசும் செய்தியை வந்து கேட்டுட்டு போங்க. பெண்களும் இந்த நாட்டை ஆளா முடியும் என பெரியார், அண்ணாவின் கூற்றுக்கு ஏற்ப அருமையாக பெண் ஒருவர் குறிப்பு கொண்டு வந்து பேசி இருக்கிறார். அவரை பாராட்டலாம் என்றார்.
அப்போது என்னப்பா கைதட்ட கூடாதா.? பெண்கள் எல்லாம் பொறாமைபடக்கூடாது என்றார். அண்ணாவை பற்றி பேசும் போது பொதுமக்களிடம் பேசிய செல்லூர் ராஜூ நல்லா கவனியுங்கள் என்றார். கவனிக்காத நிர்வாகிகளை பார்த்த செல்லூர் ராஜூ உடனே சோபிகா இங்க பாரு.” என்றார். புரட்சி தலைவர் காலத்தில் 17 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்த அதிமுக இன்றைக்கு அம்மா காலத்தில் 1.5கோடி தொண்டர்களுடன் இருந்த கழகம் இன்றைக்கு எடப்பாடி தலைமையில் 2.5 கோடி தொண்டர்களுடன் நிலைத்து நிற்கிறது. 52 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி தான் அதிமுக. ஒரு உத்தமரின் பிறந்த நாளை தான் எடப்பாடியார் கொண்டாட சொல்லி இருக்கிறார்.
கலைஞர் குடும்பத்துல தான் பிறக்கணும்
இன்றைக்கு இருக்கிற அமைச்சரை போல இல்ல, எடப்பாடியாரின் ஆட்சியில் சிறந்த வளர்ச்சிகளை கொடுத்த எங்களது தம்பி SP வேலுமணியை பொய் வழக்கு போடுகிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். ஏய் நாங்க உங்க அப்பனையே பார்த்து விட்டோம், நீ என்ன சுஜிபி., நீ ஒரு பொம்மை முதல்வர். வாக்கு அளித்தவருக்கு துரோகம் செய்யும் ஒரே கட்சி திமுகதான்.
நாங்கள் ஆட்சி வந்த பிறகு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை, என மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் கூறினார். உங்க ஆட்சியில் முதல் வருடத்தில் 25 பேர் இறந்தார்கள், இந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் உயிரிழப்பு.
மது ஒழிப்பு மாநாடு ஒரு கண்துடைப்பு, தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறுமா ஓடுது. மறுபிறவி இருந்தால் தாய்க்கு மகனாக பிறக்கும் பாட்டு பாடுற மாதிரி பிறந்த கலைஞர் குடும்பத்துல தான் பிறக்கணும், மகனாகவோ.! பேரனாகவோ.! என்னமா வாழ்ராய்ங்க.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion