மேலும் அறிய
நியோமேக்ஸ் வழக்கு: முதலீட்டாளர்களுக்கு பணமா? நிலமா? எது வேண்டும்?
முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு பணமாக அல்லது நிலமாக வேண்டுமா என தெளிவு படுத்த அவர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மற்றும் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கு
மதுரையை தலைமை இடமாக கொண்டு ‘நியோமேக்ஸ்' நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி என பலர் உள்ளனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும் நிலம் தருவதாக ஆசை வார்த்தை கூறி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுரை சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.
முடிவுக்கு வர வேண்டும்
இந்த நிலையில் நியோமேக்ஸ் மோசடி வழக்கில் ஜாமீன் பெறப்பட்ட நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து, மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் கூறுகையில், எங்களிடம் உள்ள கோடிக்கணக்கான சதுர மீட்டர் நிலத்தை ஒப்படைத்து விட்டோம். அதை முதலீட்டாளர்களுக்கு நடுநிலையாளர்கள் முன்னிலையில் நிலத்தை வழங்க தயாராக உள்ளோம் என்றார். போலீசார் தரப்பில், 23,0649 முதலீட்டாளர்கள் புகார் கொடுத்து உள்ளனர்.
முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு பணமாக அல்லது நிலமாக வேண்டுமா என தெளிவுப்படுத்த அவர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்தனர்.
விசாரணை ஒத்திவைப்பு
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நியோமேக்ஸ் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப நிலமாகவோ பணமாகவோ திரும்ப பெற தயாராக உள்ளனர். எனவே நியோமேக்ஸ் சொத்துகளை பிரித்து கொடுக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. அதில் மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுதுறையை சேர்ந்த அதிகாரி, நகர திட்டமிடல் இயக்குநரக அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்படும்?முதலீட்டு பணம் விரைவில் திரும்ப கிடைக்கும் வகையில் இந்த குழு செயல்படும். இதுகுறித்த ஆலோசனைகளை, பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பிலும், அனைத்து தரப்புகள் தரப்பில் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement