Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 15th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

SIR படிவங்கள் 100% விநியோகம்
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். படிவ விநியோகப் பணி 100% முடிந்துவிட்டதாக தெரிவிப்பு. மொத்தம் 6.41 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதேபோல் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றும் பணியும் 100% முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 80 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்
இன்று முதல் விருப்பமனு
பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படிவங்களை பெறலாம் என தெரிவிப்பு. இன்று மட்டும் பகல் 12 மணிக்கு விருப்ப மனு தாக்கல் தொடக்கம்
இன்னும் டைம் இருக்கு..
"2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது” தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
அமித்ஷா - நயினார் சந்திப்பில் நடந்தது என்ன?
அதிமுகவிடம் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதால் அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக கட்சியினர் பணியாற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு. ஜனவரி 2வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது NDA கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தவும் திட்டம்
நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உரிமம் பெறாத நாய் உரிமையாளர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கும் பணிகள் தொடக்கம். உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களை கண்டறிந்து தலா ரூ.5000 அபராதம் விதிக்க 15 மண்டலங்களுக்கும் தலா 1 குழு என 15 சிறப்பு குழுக்கள் அமைப்பு. உரிமம் பெற 4 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் இதுவரை 57,602 நாய்களுக்கு மட்டுமே உரிமம் | பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரை திணறவைக்கும் காற்று மாசு
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளதால், மக்கள் மூச்சு விட சிரப்படும் |நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காற்று தர குறியீட்டு எண் அளவு 459-ஆக பதிவாகி, 'மிக மிக மோசம்' என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் தலைநகரில் 'கிராப்-4' கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளன. இதன்படி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு, BS-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் BS-4 டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா இல்லாமல் புதிய கூட்டமைப்பு
நம்பகமான நட்பு நாடுகளுடன் AI துறையில் பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்தி, ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க, PAX SILICA என்ற |புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது அமெரிக்கா. ஆனால் இதில் இந்தியா இடம்பெறவில்லை. ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
நிஜ ஹீரோவிற்கு குவியும் பாராட்டு
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அகமத் அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அகமத் ஒரு ஹீரோ என்றும், இரு இடங்களில் குண்டடிப்பட்ட அவருக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும் அவரது உறவினர் முஸ்தஃபா பேட்டி. இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலி.
கோரிக்கையை கைவிட்ட உக்ரைன்
NATO கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவிப்பு. அதே நேரம் எந்த ஒரு நிலப் பகுதியை ரஷ்யாவுக்கு தர முடியாது என்றும், தங்களது பாது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன் அரசு வலியுறுத்தல். அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
சிக்ஸரில் சாதனை
சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்ஸின் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அபிஷேக் சர்மா. ரோகித், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டுள்ளனர்.





















