மேலும் அறிய
Madurai Hc: தென்காசி நர்சிங் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறையினரால் வைக்கப்பட்ட சீல் உடனடியாக அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரைக் கிளை
கல்லூரிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினருக்கு அதிகாரம் இல்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தென்காசி சேர்ந்தவர் பவித்திரா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்..,” தென்காசியில் எனது கணவர் டிப்ளமோ நர்சிங் பாராமெடிக்கல் கல்லூரி வைத்து நடத்தி வருகிறார் அந்த கல்லூரியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் நர்சிங் மற்றும் லேப் டெக்னீசியன் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவி ஒருவர் கொடுக்கப்பட்ட பொய்யான புகாரில் கனவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கல்லூரி எவ்வித முன்னறிவிப்புமின்றி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் வருவாய் துறையினர் கல்லூரியை மூடி சீல் வைத்துள்ளனர். சீல் வைப்பதற்கு முன்பாக ஆய்வு செய்யவோ அல்லது விளக்கம் கேட்டோ எந்த நோட்டீஸோ எதுவும் அனுப்பவில்லை.
கல்லூரியில் உள்ளே தான் மாணவ மாணவிகளின் மதிப்பெண் சான்றுகள் மாற்றுச் சான்று என முக்கியமான ஆவணங்கள் உள்ளது. கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டதையே செய்திதாள்கள் மூலம் தான் தெரிந்து கொண்டோம். எனவே எங்கள் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அப்புறப்படுத்த கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜீவா ஆஜராகி தேர்வுகள் நெருங்கி வர சூழலில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கல்லூரி சீல் வைக்கப்பட்டுள்ளது இதனால் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது இதனை கருத்தில் கொண்டு சீலையை அகற்ற வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். இந்த வழக்கில் தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில் கல்லூரிக்கு சீல் வைப்பதற்கு எந்த அதிகாரம் இல்லை என உத்தரவிட்ட நீதிபதி கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN BJP Candidates : ’நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி?’ பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் இதுதான்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Election Commissioners: 4 நாட்களில் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்? கூடுகிறது பிரதமர் தலைமையிலான குழு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















