மேலும் அறிய
மதுரையில் மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து - உயிர் தப்பிய செவிலியர்கள்
செவிலியர் தங்கியிருந்த அறையில் இருந்த, செவிலியர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்தன.
மதுரை புதூர் பகுதியில் பாரதி மருத்துவமனை கட்டிடத்தில் செவிலியர்கள் தங்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. வானுயர அளவிற்கு எழும்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்கியிருந்த நிலையில் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய செவிலியர்கள்.
மதுரையில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை
மதுரை மாநகர் புதூர் அழகர்கோவில்சாலை பகுதியில் உள்ள பாரதி மருத்துவமனையானது சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டுவந்த மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ப்ளாஸ்டாபாரிஸ் ஷெட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏசியில், ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீப்பொறி வெளியேறி தீ பரவ தொடங்கியது. இதனை அடுத்து அங்கு தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில் மருத்துவமனை பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஒரு மாணவி மயக்கமடைந்ததார். பின்னா் இயல்புநிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்தன
இதனையடுத்து தீயானது மளமளவென பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்ட நிலையில் வானுயர அளவிற்கு கரும்புகை வெளியேறிய நிலையில் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 3 தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் செவிலியர்கள் தங்கும் அறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஷெட் ஆகியவற்றை உடைத்து கரும்பு கையை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் செவிலியர்கள் 30க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த செவிலியர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்தன. தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பாக மருத்துவமனை கட்டிடத்தில் ஏற்பட்ட கரும்புகையானது முழுவதிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
அடைத்து வைக்கப்பட்ட அறையில் புகை மட்டும் உருவான நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மதுரை புதூர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையான பாரதி மருத்துவமனை கட்டிடத்தில் தங்கி இருந்த செவிலியர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நல்வாழ்க்காக யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். இந்த தீ விபத்து தொடர்பாக புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொது அறிவு
தமிழ்நாடு
ஆன்மிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion