மேலும் அறிய
காவல்துறை வாகனம் மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணம்: கதறும் உறவினர்கள்.. காவலர்கள் மீது தவறு இருக்கா?
காவல்துறை வாகனம் மோதியதில் பைக்கில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குவிந்துள்ள உறவினர்கள் - பரபரப்பு.

உறவினர்கள் குவிந்தனர்
Source : whatsapp
காவல்துறையினர் தவறான பாதையில் வாகனத்தை இயக்கினர், கஞ்சா போதையில் இருந்தனர். எங்களை தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டனர் என உயிரிழந்த பெண்ணின் சகோதரி குற்றச்சாட்டு.
சிவகங்கையில் சாலை விபத்து
மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2) ஆகியோர், மதுரை அனஞ்சியூர் பகுதியில் மரணமடைந்த உறவினர் தங்கம்மாளின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு, டூ வீலரில் மதுரைக்கு நேற்று மாலை பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சோனை ஈஸ்வரி (25) என்பவரும் பயணம் செய்தனர். அப்போது சக்குடி அருகே எதிரே வந்த காவல்துறையினரின் வாகனம் பைக்கில் மோதியதில் பிரசாத் அவரது மனைவி சத்யா அவர்களது குழந்தை அஷ்வின் ஆகியோர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறை வேன் ஒட்டுனரை கைது செய்ய வேண்டும் என கோரினர்.
விபத்து நடந்த உடனே காரை விட்டுவிட்டு காவல்துறையினர் ஏன் ஓடினார்கள்
விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ள. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய சத்யாவின் சகோதரி மங்கையர்கரசி...,” காவல்துறையினர்தான் தவறான பாதையில் வந்தனர். அதனால் தான் இந்த உயிரிழப்பு நடந்தது. அதுமட்டுமின்றி விபத்து நடந்த உடனே காரை விட்டுவிட்டு காவல்துறையினர் ஏன் ஓடினார்கள்? என்றும் நாங்கள் மடியில் வைத்திருந்த எங்களது தங்கச்சியை எங்களை தள்ளிவிட்டு எடுத்துச் சென்றார்கள். இதற்குக் காரணமான 5 பேரும் கஞ்சா போதையில் இருந்ததாகவும், அவர்களே உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்றும் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















