மேலும் அறிய

மீண்டும் காலியான பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள்; உடனே நிரப்ப வலியுறுத்தல்!

கல்வித்துறையில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி பல மாவட்டங்களில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது- ராமதாஸ்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என போற்றப்படும் தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

18 மாவட்டங்களில் காலி

அதேசமயம் பெரும்பாலான மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கிருஷ்ணகிரி, கரூர், திருப்பூர், சிவகங்கை, பெரம்பலூர், நீலகிரி, திருவள்ளூர், தஞ்சாவூர், வேலூர், தேனி, சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், அரியலூர், இராணிப்பேட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை என 18 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் இல்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்  13 புதிய தொடக்கப் பள்ளிகளும்,  5 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதி மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கும் அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த புதிய பள்ளிகள் பட்டியலில்  உள்ள கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குதல், தரம் உயர்த்துதல் போன்ற முக்கியமான பணிகளை செய்யும் இடத்தில் அந்த மாவட்ட கல்வித் துறையின் முதன்மை அதிகாரி இல்லாத பட்சத்தில் எவ்வாறு சிறப்பாக செயல்படுத்த முடியும்?

என்னென்ன பணிகள்?

இதேபோல் 11-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற தயார்படுத்துதல், அரசு பள்ளிகளில் 6, 7, 8  வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 'நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி'  திட்டத்தின் வாயிலாக கூடுதல் கவனம் தேவை என கண்டறியப்படும் மாணவர்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை கண்காணித்தல்,  'தடைகளைத் தாண்டி தேர்ச்சி' திட்டத்தின் மூலம் பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் கல்வியின் அவசியத்தை விளக்கி விழிப்புணர்வூட்டுதல், கல்வியாண்டின் இறுதிக் காலம் என்பதால் மாணவர்களுக்கான கலை, கலாச்சார, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஆசிரியர்கள் மாணவர்களிடையேயான உறவை மேம்படுத்துதல், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த புகார்களை உடனுக்குடன் விசாரித்து தீர்வு காணுதல், பருவ மழைக் காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், எல்லாவற்றிலும் முக்கியமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 2026 தொடங்கியது முதல் சுமார் இரண்டரை மாத காலம், சுமார் 17 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்ற பொதுத்தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துதல், பாடங்களை விரைவாக முடித்து மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்வது குறித்த பயிற்சியளித்தல்  என கல்வித்துறையின் பல்வேறு பணிகளையும், திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டியது அந்தந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரின் சீரிய கடமைகளாகும். 

உடனே நிரப்பக் கோரிக்கை

இவைகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகள், குறைபாடுகள் குறித்த பெற்றோர்களின் புகார்கள் மீதான நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டிய பணியும் முதன்மை கல்வி அலுவலரின் பணி ஆகும். 

கல்வித்துறையில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி பல மாவட்டங்களில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. எனவே உடனடியாக காலியாக உள்ள மாவட்டங்களுக்கான முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget