மேலும் அறிய
2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம் !
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வீதியில் போராடி வருகிறார்கள் அதற்கு அக்கறை காட்டாமல் மாநாடுகளுக்கு ஸ்டாலின் அக்கறை செலுத்துகிறார். - ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்
Source : whatsapp
2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே கருணாநிதி விலாசமாக மாறிவிடும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை
ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்
”இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாகதிமுக அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள். மக்கள் வரிப்பணம் முழுமையாக மக்களுக்கு சேர்ப்பதில் கடைபிடிக்கவில்லை மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்கள் மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம் அதுதான் மரபு அதுதான் மக்களின் நம்பிக்கையை உருவாக்கும். இங்கே கடை தேங்காய் எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல் மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களை மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி ஆயிரம் ரூபாய் திமுக அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
தேர்தலுக்காக திட்டங்கள்
தேர்தல் வரும் போது தான் மக்களின் ஞாபகம் ஸ்டாலினுக்கு வரும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மகளிர்
உரிமை தொகை அறிவித்தார். ஆனால் அந்த திட்டத்தில் உடனே செயல்படுத்தவில்லை. எடப்பாடியார் சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்திலும் அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து செயல்படுத்த தொடங்கினார். இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடியார் குற்றச்சாட்டி வருகிறார். அரசின் வரிப்பணம் அனைவருக்கும் வழங்க வேண்டும் என ஜனநாயகக் குரலை எடப்பாடியார் எழுப்பி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார். இதை பார்க்கும் போது ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலை உள்ளது. காலம்,காலமாக முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் செயல்படும் மரபைமீறி திமுக கட்சிக்காக முதலமைச்சர் என ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கடந்த நான்கரை ஆண்டு கலம் அவரது நடவடிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஸ்டாலின்
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்கள் ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், திமுகவின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞரை மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார். போராட்டக் களத்தில் இருக்கும் மக்களை அடக்குமுறை கையாண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஸ்டாலின் இந்த அரசுக்கு ஓட்டு போட வேண்டுமா? என்று மக்களுக்கு அச்சமும், பயம் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது .இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் என மக்கள் எச்சரிக்கை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தால் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது .மக்கள் பிரச்சினை தீர்க்க முன்வரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தீர்வு காண வேண்டும், இல்லை என்றால் தமிழக மக்கள் விலாசம் காணாமல் போய்விடும், தமிழக மொழி, கலாச்சாரம் இவற்றையெல்லாம் காணாமல் போய் கருணாநிதி விலாசமாக தமிழ்நாடு மாறிவிடும் என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















