மேலும் அறிய
Madurai - உசிலம்பட்டி வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களின் பரவசம், பெருமாள் அருள் மழை!
கோயில் பிரகாரத்திற்குள் வலம் வந்து பெருமாள் கோயில் உள்பகுதியிலும், ஆழ்வார் வெளிப்பகுதியிலும் வைக்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்கள் பாடி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பெருமாள் கோயிலில் வழிபாடு
Source : whatsapp
உசிலம்பட்டி அருகே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிந்துபட்டி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஆல்வார் பாசுரங்கள் வாசிக்கப்பட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
உசிலம்பட்டியில் சிறப்பு பூஜை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மூல ஸ்தானத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளிய வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் நம்மாழ்வார் சுவாமிகள் கோயில் பிரகாரத்திற்குள் வலம் வந்து பெருமாள் கோயில் உள்பகுதியிலும், ஆழ்வார் வெளிப்பகுதியிலும் வைக்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்கள் பாடி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறந்ததும், ஆழ்வாருக்கு ஆசி வழங்கிய வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமியை ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று, சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement





















