மேலும் அறிய
மதுரையில் விஜய் vs திமுக: பதிலடி போஸ்டர்கள்! 'சிங்கத்தின் கர்ஜனை'யால் பரபரப்பு
கதறல் சத்தம் கேக்குதா..Uncle சிங்கத்தின் கர்ஜனை தொடரும்.. அது உங்கள் உடன்பிறப்புகளை தூங்கவிடாது.. திமுகவிற்கு எதிராக தவெகவினர் சுவரொட்டி.

தவெக தொண்டர்கள்
Source : whats app
மதுரையில் விஜய்க்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
விஜய் பேச்சுக்கு எதிராக தி.மு.க., நிர்வாகிகள் போஸ்டர்
தமிழக வெற்றிக் கழக 2- ஆவது மாநில மாநாடு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றிய விஜய் முதல்வரை அங்கிள் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். மேலும் பிரதமர் மோடியை மிஸ்டர் நரேந்திர மோடி என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் விஜயின் பேச்சு குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க.,வினர் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் What Bro, Over Bro, அடக்கி வாசிங்க bro என்கிற வாசகங்களுடன் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி விஜய்க்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக மதுரையில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள். "கதறல் சத்தம் கேக்குதா..Uncle சிங்கத்தின் கர்ஜனை தொடரும்.. அது உங்கள் உடன்பிறப்புகளை தூங்கவிடாது " என உடன்பிறப்புக்கள் திமுக கட்சியின் கொடி வண்ண நிறத்தில் எழுதப்பட்டுள்ள போஸ்டர்களை மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் விஜய்க்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















