கிராமங்களில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம்... முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு !
விருந்தோம்பல் தமிழனின் அடையாளம் என்பார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜகாந்த். நடிகர்கள் முதல் சாமானியர்கள் வரை பசிக்கு உணவளிக்கும் வள்ளல் என்பார்கள்.

உசிலம்பட்டியில் தே.மு.தி.க., தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தே.மு.தி.க., நிர்வாகிகள் கொண்டாடினர்.
எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த்
திமுக - அதிமுக என இரண்டு மாநிலக் கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ்நாட்டில் ’கேப்டன்’ விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் உருவானது கருணாநிதி ஜெயலலிதாவின் டாம் அண்ட் - ஜெர்ரி அரசியலால் போரடித்துப்போன மக்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தது எனலாம். 2005ல் கட்சித் தொடக்கம் 2011ல் அடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் என அவர் சிக்ஸர் அடித்தது கழகங்களை கதிகலங்கச் செய்தது, மக்களிடமும் மத்தாப்பூத் தீப்பொறி அளவிலான நம்பிக்கையைக் கொடுத்தது. அரசியல் மட்டுமல்ல சினிமா வாழ்க்கையும் அவருக்கு அப்படித்தான்.
பசிக்கு உணவளிக்கும் வள்ளல் என்பார்கள்.
விஜயகாந்த் சினிமாவாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் தனக்கென தனி கொள்கைகளை வைத்திருந்தார். நடிக்கும் பொழுதே பொது பிரச்னைகளுக்கு குரல் கொடுத்த வெகு சில நடிகர்களுள் விஜயகாந்தும் ஒருவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஆதரவாக இருந்த விஜயகாந்த் , தமிழ் மீது கொண்ட பற்றினால் பிந்நாட்களில் வேற்று மொழி படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். 2009ல் இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் மணிவண்ணன் எழுதிய நாடகம் ஒன்று பெரியார் திடலில் அரங்கேற்றப்பட்டது. அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்து அதில் வந்தப் பணத்தை ஈழத்துக்காக எடுத்துக் கொடுத்த விஜயகாந்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் சிலாகிப்பார் சத்யராஜ். ‘ ஈழத்துக்காக நிதியுதவி அளித்த முதல் தமிழ் நடிகர்’ விஜயகாந்த்தான் என்பார் அவர். விருந்தோம்பல் தமிழனின் அடையாளம் என்பார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜகாந்த். நடிகர்கள் முதல் சாமானியர்கள் வரை பசிக்கு உணவளிக்கும் வள்ளல் என்பார்கள். இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிராமங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம்
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த்-ன் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக நிர்வாகிகள் வறுமை ஒழிப்பு தினமாகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் பல்வேறு கிராமங்களில் கொண்டாடி வருகின்றனர்.
உசிலம்பட்டியில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம்
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய வேண்டி மூல ஸ்தானத்தில் உள்ள முருகன் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் தேமுதிக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து முருகன் கோயில் முன்பு தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொருப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், பொதுமக்களுக்கு லட்டு பூந்தி உள்ளிட்ட இனிப்புகளையும், உணவாக கேசரியும் வழங்கி கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை அனுசரித்து கொண்டாடினர்.,





















