Madurai: ”தி.மு.க., கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி அங்கு வாரிசு அரசியல் தான்” - செல்லூர் ராஜூ
இந்திய ஜனநாய நாட்டில் யாரும் கட்சியை தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். - விஜய் மாநாடு நடத்துவது குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில்.
ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு பலூன், ஆளும்கட்சி என்றால் வெள்ளை கொடை பிடிப்பது ஸ்டாலின் நாடகம். - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
மு.கவிற்கு தங்களது குடும்ப மட்டுமே முக்கியம்
மதுரையில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது...,” மத்திய அரசை கண்டித்து தி.மு.க., அரசு போராட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார்கள். மக்களை ஏமாற்றும் ஒரு நாடகம் தான் இந்த ஆர்ப்பாட்டம். தி.மு.கவிற்கு தங்களது குடும்ப மட்டுமே முக்கியம் என்றும், மக்கள் பிரச்னையில் அக்கறை இல்லை. கச்சத்தீவு மீட்பது, முல்லை பெரியாறு அணை மீட்பு, இது போன்றவைகளில் முதல்வருக்கு கவனம் இல்லை என்றார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் டெல்லி நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னையை பற்றி பேசவில்லை. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் செங்கோல் பற்றி பேசிவருகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை குறித்து பேசவில்லை, திட்டம் பஜ்ஜெட் குறித்து பேசவில்லை. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பட்டப்பகலில் கொலை, கொள்ளை மதுரையில் 2 வாரத்தில் 14 கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ளது.
பஞ்ஜெட் முழுமையாக வெளியாகவில்லை
மத்திய அரசின் பஞ்ஜெட் தாக்கல் இன்னும் முழுமையாக வெளியிட படவில்லை. பஜ்ஜெட் அறிக்கை முழுமையாக வந்த பிறகு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன் குறித்தும் கண்டனம் குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும். தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுக்க பெண்களிடம் ஆயிரம் கண்டிஷன் போடுகிறார்கள். 3 வருடம் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை. உள்ளாட்சிதுறை சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டது., உணவு பொருட்களை கூட்டுறவு துறையில் வாங்கப்பட்டது. அம்மா உணவகத்தை தேர்தல் நெருங்குவதல் ஆய்வு நடத்துகிறார் முதல்வர். தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்ததை முற்றிலுமாக திமுக ஆட்சிக்கு வந்து முடங்கியுள்ளது. ஓ.பி.எஸ்., அதிமுக இணைத்தால் போது பொறுப்பு வேண்டாம் என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் பார்த்து கொள்வார் என்றார்.
நேற்று நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் என குறிப்பிட்டுள்ளது குறித்து கேள்விக்கு.? நீதிமன்றத்தில் பொது செயலாளர் குறித்து தொடுக்கப்பட்ட பல வழக்கில் பொது செயலாளர் என எத்தனையோ தீர்ப்பு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க., தொண்டர்கள் பொது செயலாளர் என ஏற்றுக்கொண்டோம் என்றார். 3 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டனம் உயர்வு. திமுக அடுத்தாண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவார்கள்., ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு பலூன், ஆளும்கட்சி என்றால் வெள்ளை கொடை பிடிப்பது ஸ்டாலின் நாடகம் தான் என விமர்சனம் செய்தார். உதயநிதி ஸ்டாலினே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மூத்த தலைவர்களே கூட இன்ப நிதியை கூட தோளில் சுமக்க தயாராக இருக்கிறோம் என கூறி இருக்கிறார். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி அங்கு வாரிசு அரசியல் தான் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால் எந்த துறையும் இருக்காது. இந்திய ஜனநாய நாட்டில் யாரும் கட்சியை தொடங்கலாம், மாநாடு நடத்தலாம் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களே.. ஆடி அமாவாசை தரிசனத்திற்கு செல்லும் முன் இதை கவனிக்கவும்