மேலும் அறிய
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
கழகத்தினுடைய வளர்ச்சிக்கு எதிர்காலத் திட்டத்தையும் இங்கே மனதில் வைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

திமுக பொதுக்குழு கூட்டத்தில்
Source : whats app
இந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்த பெரும் வாய்ப்பை கொடுத்தீர்கள், இதைவிட என் வாழ்க்கையில் பெரிய பெயர் எதுவும் இல்லை. - அமைச்சர் மூர்த்தி உருக்கமான பேச்சு.
மதுரை தி.மு.க., பொதுக்குழுவில் அமைச்சர் மூர்த்தி
தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார் முன்னதாக, அமைச்சர் மூர்த்தி பேசுகையில்..,” மதுரை மண் அரசியலினுடைய விழிப்புணர்வை பெற்று இருக்க கூடிய மண். நம்முடைய மதுரை மண், எத்தனையோ மாநாடுகளை நடத்தி எழுச்சியுற்று இயக்கத்தை பொலிவோடு, வலுவோடும் நடத்திக் கொண்டிருக்க கூடிய, நம்முடைய தலைவர் அவர்கள் இன்றைக்கு அரசு செயல்பாடும் கழக செயல்பாடும் இரு கண்களாக பாவித்து இன்றைக்கு எந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 24 மணி நேரங்களிலே 20 மணி நேரம் மக்களுக்காக செலவு செய்கிறார்கள்.
வெற்றிக்கும் முதலிடமாக மதுரை மாவட்டம் இருக்கும்
அதேபோல கழகத்தினுடைய வளர்ச்சிக்கு எதிர்காலத் திட்டத்தையும் இங்கே மனதில் வைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்விலே வருகை தந்திருக்க கூடிய துணை முதல்வர் அவர்களையும் இந்த நேரம் நான் வரவேற்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைக்கு அரசியல் களம் மதுரையிலே நம்முடைய முதல்வர் கழகத் தலைவர் அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். அன்னை மீனாட்சி மண்ணிலே ஆரம்பித்து இருக்கக்கூடிய இந்த கழக பணி 2026லே வெற்றிக்கும் முதலிடமாக மதுரை மாவட்டம் இருக்கும். மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும்.
இதைவிட என் வாழ்க்கையில் பெரிய பெயர் எதுவும் இல்லை
தலைவா எல்லாம் தந்தீர்கள் எனக்கு தொடர்ந்து 25 ஆண்டு காலம் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு தந்திருக்கிறீர்கள். அதற்கு முன்னால் ஒன்றிய செயலாளர். சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு தந்தீர்கள். அதற்கு மேலாக இந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்த பெரும் வாய்ப்பை கொடுத்தீர்கள். இதைவிட என் வாழ்க்கையில் பெரிய பெயர் எதுவும் இல்லை, என வரவேற்று உருக்கமான முறையில் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
அரசியல்





















