மேலும் அறிய
மதுரை வளர்ச்சி திட்டம் ...? உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை !
சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் உள்ளது போல, மதுரை ஹாக்கி மைதானத்தை அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்
Source : whats app
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை.
தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நடவடிக்கைகள் குறித்து துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசனை
குறிப்பாக மதுரை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட கட்டுமான பணிகள் மற்றும் அனைத்து துறை சார்பில் பொதுமக்களிடம் பெறப்பட்டு வரும் கோரிக்கை மனுக்கள் மற்றும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், தங்க தமிழ் செல்வன், காவல் ஆணையர் லோகநாதன் உட்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டு மைதானத்தில் ஆய்வு
முன்னதாக மதுரை விளையாட்டு அரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்க் கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை விளையாட்டு அரங்கில் கட்டப்பட்டு வரும் சிந்தடிக் ஹாக்கி மைதானம் மற்றும் நீச்சல் குளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்க்கொண்டு திட்டத்தின் தற்போதைய நிலை, திட்டம் எப்போது நிறைவு பெறும் என அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
செய்தியாளர் சந்திப்பு
மேலும், பாரா விளையாட்டு வீரர்களுக்கான உள் விளையாட்டு அரங்கில் போட்டிகளில் வெற்றி பாரா விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் "தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுப்பதற்காக பாரா ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பயிற்சி எடுத்து வருகிறார்கள். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மைதானங்கள் அமைத்து தருவது இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னுதாரணமான அமைந்துள்ளது.
மதுரை ஹாக்கி மைதானம் பயிற்சி எடுப்பதற்கு சிறந்த களமாக அமையும்
தமிழகத்தில் முதன் முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்து 29 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளன. நாங்கள் உட்பட உலகெங்கும் உள்ள ஹாக்கி ரசிகர்கள் சர்வதேச போட்டியை காண்பதற்காக ஆவலுடன் உள்ளோம். ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடத்துவதற்காக தமிழக அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் உள்ளது போல, மதுரை ஹாக்கி மைதானத்தை அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. தென் தமிழகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மதுரை ஹாக்கி மைதானம் பயிற்சி எடுப்பதற்கு சிறந்த களமாக அமையும்" என கூறினார், ஆய்வில் துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















