மேலும் அறிய

மதுரையிலிருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்: பயணிகளுக்கு இனிதே பயணம்... தேதி & நேரம் இதோ!

சிறப்பு ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள்  இணைக்கப்படும்.

 
மதுரையில் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு வசதிகள்
 
மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 69-வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்ட போது பல்வேறு விசயங்கள் பகிரப்பட்டது. குறிப்பாக ரயில்வே ஊழியர்கள் ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூபாய் 1245 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ரயில்களை வேகமாக இயக்குவதிலும், கால தாமதம் இல்லாமல் பயணித்ததிலும், ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரைக் கோட்டத்திற்கு ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு லோகோ பைலட்டுகள் உரிய ஓய்வு எடுக்கும் வகையில் ஓடும் தொழிலாளர் தங்கும் அறைகள் பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளன. அதே போல் மதுரையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பயணிகள் வசதிக்க்காக மதுரையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
பீகார் மாநில பரூணிக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது
 
பயணிகளின் வசதிக்காக மதுரையிலிருந்து பீகார் மாநில பரூணிக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை - பரூணி  சிறப்பு ரயில் (06059) மதுரையில் இருந்து செப்டம்பர் 10, 17, 24, அக்டோபர் 01, 08, 15, 22, 29, நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில்  ‌இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு பரூணி சென்று சேரும். 
 
ரயில் மறு மார்க்கம்
 
மறு மார்க்கத்தில் பரூணி - மதுரை சிறப்பு ரயில் (06060) செப்டம்பர் 13, 20, 27, அக்டோபர் 04, 11, 18, 25, நவம்பர் 01, 08, 15, 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் காலை 07.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
 
ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளுக்கும் இணைக்கப்பட்டுள்ளது
 
இந்த ரயில்கள்  திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர், நாயுடு பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, எலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், துவ்வாடா,  விஜயநகரம், ஸ்ரீகாகுலம் ரோடு, பலாசா,  குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பட்ரக், பலாசோர், கரக்பூர், அண்டுல், தன்குனி, பார்த்தமான், துர்காபூர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசிடிஹ், ஜாஜா,  கியூல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள்  இணைக்கப்படும்.
 
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget