மேலும் அறிய

TN 12th Result 2023: பிளஸ்-2 தேர்வில் 514 மதிப்பெண், ஆனால் 4 பாடத்தில் பெயில் அதிர்ச்சியடைந்த மதுரை மாணவி!

600 க்கு 514 மதிப்பெண் எடுத்து நான்கு பாடத்தில் தோல்வி என்றும் வந்துள்ளதால் மிகவும் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத்தேர்வுகளை தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

TN 12th Result 2023 Nellai, Tenkasi, Kanyakumari district students percentage TNN TN 12th Result 2023: நெல்லை , தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட  மாணவர்களின் தேர்ச்சி விவரம்

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பங்கேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 95.84%  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 ஆயிரம் ஆண் மாணவர்களும், 17306  பெண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

12th, 11th Class Supplementary Exam 2023 Dates time table Full schedule 12th Supplementary Exam 2023: 12, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; முழு அட்டவணை இதோ!

அந்த வகையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(26) என்பவரது மனைவி ஆர்த்தி (19) தேர்வு எழுதி தேர்ச்சி முடிவுகள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021-ல் ஆர்த்தி தனது 17 வயதில் பதினொன்றாம் வகுப்பை திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் முடித்து இருந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனை திருமணம் செய்திருந்தார். தொடர்ந்து, குழந்தை திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தங்களது திருமண வாழ்க்கையினால் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக வேல்முருகன் தனது மனைவி ஆர்த்தியை 2023 இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத முடிவு செய்து. திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் 11-ம் வகுப்பு முடித்த சான்றிதழில் காண்பித்து 2022-ல்சேர்த்து பொதுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வாங்கி பொதுதேர்வு நுழைவுச்சீட்டு பெற்று கடந்த 2023 மார்ச் 13ஆம் தேதி திருமங்கலம் சென் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் எழுதினார்.

TN 12th Result 2023: பிளஸ்-2 தேர்வில் 514 மதிப்பெண், ஆனால் 4 பாடத்தில் பெயில் அதிர்ச்சியடைந்த மதுரை மாணவி!

நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆர்த்தியும் தனது கணவர் வேல்முருகனுடன் சேர்ந்து ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில்

தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்களும்.,

ஆங்கிலத்தில் 100க்கு 92 மதிப்பெண்களும்.,

கணிதத்தில் 100க்கு 56 மதிப்பெண்களும்.,

இயற்பியல் துறையில் 100க்கு 75 மதிப்பெண்களும்

வேதியல் துறையில் 100க்கு 71 மதிப்பெண்களும்

உயர்கணிதத்தில் 100க்கு 82 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆர்த்தி தனது ஆன்லைன் பொதுத்தேர்வு முடிவுகளை திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளிக்கு எடுத்துச் சென்று காண்பித்த போது உரிய விளக்கம் அளிக்காமல் இருந்ததாகவும்., தமிழில் 90 மதிப்பெண்கள் தான் எழுத முடியும் ஆனால், இவர்கள் 138 மதிப்பெண்கள் அளித்துள்ளனர். நான் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் என்னுடைய உண்மையான மதிப்பெண்களை தெரிந்தால் மட்டுமே உயர் கல்வியில் பயில முடியும் அல்லது மீண்டும் பொது தேர்வு எழுத முடியும் இப்படி எங்களை குழப்பத்தில் ஆழ்த்துவது போன்ற முடிவுகள் வெளியாகி இருப்பது தங்களுக்கு வேதனை அளித்துள்ளதாகவும் அதே போல் 600 க்கு 514 மதிப்பெண் எடுத்து நான்கு பாடத்தில் தோல்வி என்றும் வந்துள்ளதால் மிகவும் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget