மேலும் அறிய
மதுரை மாநகராட்சி வரி மோசடி: பில் கலெக்டர்களின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! பாஸ்வேர்டை திருடியது யார்?
முறைகேடில் தொடர்புடைய அனைத்து நிலைகளிலும் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.

மதுரை மாநகராட்சி
Source : whats app
எங்கள் பாஸ்வேர்டைத் மேலதிகாரிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்தினார்கள். பணியிட நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்களின் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்ர்.
மதுரை மாநகராட்சியில் மோசடி
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிகளவு மக்கள் தொகை கொண்டுள்ளது. இந்த சூழலில் மாநாகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கட்டங்களுக்கு வரிகுறைப்பு செய்து மோசடி நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 5 மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 நபர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில்கலெக்டர்கள் முதல் மேல் அதிகாரிகள் வரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேட்டில் பாஸ்வேர்டை மேலதிகாரிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்தினார்கள் என பணியிட நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்களின் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குற்றம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில்கலெக்டர்கள் கூறுகையில்..,” இந்த மோசடி 2017-இலிருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்களுடைய பாஸ்வேர்டுகளை அதிகாரிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்தி, வணிகக் கட்டிடங்களுக்கு வரி குறைப்பு செய்துள்ளனர். எங்களது பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்ததும், பாதுகாப்புக்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சித்தோம். ஆனால் மேலதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். எங்கள் பாஸ்வேர்டுகளை, மேலதிகாரிகள் வற்புறுத்தி பெற்றபின், அந்த பாஸ்வேர்டுகளை கொண்டு வேறு மண்டலங்களில் வரி குறைப்பு செய்துள்ளனர். ஒரே பாஸ்வேர்டால் வரி குறைப்பு செய்ய இயலாது அனைத்து அதிகாரிகளின் அனுமதியும் தேவைப்படும். ஆனால் எங்களுடைய பாஸ்வேர்டை மட்டுமே வைத்து குற்றம் சுமத்தி, பணியிட நீக்கம் செய்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த முறைகேடில் தொடர்புடைய அனைத்து நிலைகளிலும் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில்..,” மேற்கண்ட இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















