Tamil Nadu Weatherman: சென்னை தான் ஹாட்ஸ்பாட்டா.!! எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும்- வெதர்மேன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம், சென்னை - புதுச்சேரி அருகே வர வாய்ப்பு இருப்பதாகவும், எந்த இடத்தில் கரையை கடக்க வாய்ப்பு என்பது தொடர்பாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. , தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை மற்றும் இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது. தற்போது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக் கூடும். மேலும் வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
வட மாவட்டங்களுக்கு அலர்ட்
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கை அருகே உருவாகும் டித்வா புயல் சென்னை–புதுச்சேரி இடையே கடற்கரைக்கு மிக அருகில் வரக்கூடும். இது கரையை கடக்குமா.? அல்லது கடலில் தொடர்ந்து நகருமா என்பது இன்னும் தெளிவாகவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாளை மறுநாள் நவம்பர் 29ஆம் தேதி அதிக கனமழை பெறக்கூடிய மாவட்டங்களாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்கள் இருக்கும் என தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,சேலம், நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெறக்கூடிய மாவட்டங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புயல் எங்கே கரையை கடக்கும்.?
மேலும் வருகிற 29ம் தேதி இரவு முதல் 30 நவம்பர் வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம் கனமழை பெறக்கூடிய மாவட்டங்களாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சென்னை–புதுச்சேரி இடையில் கரையை கடக்கும் பட்சத்தில் உள்நாட்டு மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு பகுதிகளிலும் நல்ல மழை கிடைக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.





















