Mahindra XEV 9S: நாட்டின் வேகமான, ப்ராண்டின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S விலை, விவரங்கள்
Mahindra XEV 9S Electric SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனத்தின் முதல் மின்சார 7 சீட்டர் எஸ்யுவி ஆன XEV 9S அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

Mahindra XEV 9S Electric SUV: மஹிந்த்ரா நிறுவனத்தின் முதல் மின்சார 7 சீட்டர் எஸ்யுவி ஆன XEV 9S காரின் தொடக்க விலை ரூ.19.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ரா XEV 9S மின்சார SUV:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனம் தனது XEV 9S SUV கார் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 7 சீட்டர் மின்சார எஸ்யுவி பிரிவில் தனது முதல் மாடலை கொண்டு வந்து, அதன் தொடக்க விலையை 19 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது. ப்ராண்டின் INGLO ஸ்கேட்போர்ட் ஆர்கிடெக்ட்சரில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. XEV 9S ஃப்ளார் ஃப்ளோர் லே-அவுட்டானது மிகப்பெரிய உட்புற இடவசதியாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, முதல் இரண்டு வரிசை இருக்கை அமைவில் மட்டுமே பயன்பாட்டிற்கான 4000 லிட்டர் இடவசதி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 527 லிட்டர் பூட் மற்றும் 150 லிட்டர் ஃப்ரங்க் ஆகியவை அடங்கும்.
மஹிந்த்ரா XEV 9S மின்சார SUV - உட்புற வசதிகள்
காரின் உட்புறமானது கன்வென்ஷியனல் எஸ்யுவியின் கேபின் என்பதை காட்டிலும், ஓய்வறைக்கும் மேலானதாக காட்சியளிக்கிறது. டேஷ்போரடானது எதிர்கால தன்மையை பிரதிபலிக்கும் விதமாக கோஸ்ட் டொ கோஸ்ட் ட்ரிபிள் ஸ்க்ரீன் லே-அவுட்டை கொண்டுள்ளது. இது குவால்காமின் அண்மைக்கால சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே, டால்பி அட்மாஸ் உடன் கூடிய 16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டோன் சிஸ்டம் மற்றும் மஹிந்த்ராவின் MAIA -AI அடிப்படையிலான இண்டர்ஃபேஸ் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இருக்கைகள் பாஸ் மோடில் வழங்கப்பட்டு வெண்டிலேஷன், ஸ்லைடிங், ரிக்ளைனிங் ஃபங்க்ஷன்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பவர்ட் அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக அகவுஸ்டிக் லேமினேடட் க்ளாஸ், ரியர் சன்ஷேட்ஸ் மற்றும் மல்டி ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல் இடம்பெற்றுள்ளன.
மஹிந்த்ரா XEV 9S மின்சார SUV - பாதுகாப்பு அம்சங்கள்:
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய XEV 9S எஸ்யுவியில், ஓட்டுனருக்கு முழங்கால் பகுதியில் ஒன்று உட்பட 7 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பல ரேடார் மற்றும் கேமராக்கள், ப்ரேக் பை வயர் டெக்னாலஜி, ப்ளைண்ட் வியூ மானிட்டரிங் மற்றும் இண்டலிஜென்ஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங் அடங்கிய லெவல் 2+ ADAS வசதிகள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக கார் உருவாக்கப்பட்டுள்ள ப்ளாட்ஃபார்மானது மஹிந்த்ராவின் செக்யூர் 360ப்ரோ அம்சத்தையும் டாப் வேரியண்ட்களில் அனுமதிக்கிறது. இது வாகனத்தின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. டாப் வேரியண்ட் Pack Three Above 79 kWh எடிஷனானது பயணத்தை மேலும் வசதியானதாக மாற்ற அடாப்டிவ் சஸ்பென்ஷன், அட்வாஸ்ட் ADAS ஹார்ட்வேர், பவர்ட் கோ-ட்ரைவர் சீட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.
மஹிந்த்ரா XEV 9S மின்சார SUV - பேட்டரி ஆப்ஷன்கள்
நடைமுறைக்கு உகந்ததாக இறுக்கமான 10 மீட்டர் டர்னிங் சர்கிள் மற்றும் 205 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. இதில் 59KWh, 70KWh மற்றும் 79KWh என மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் 20 முதல் 80 சதவிகிதத்தை வெறும் 20 நிமிடங்களில் எட்ட முடியுமாம்.
இந்த பேட்டரிகளானது 210KW, 380Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மோட்டர்களுடன் இந்த பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளன. நிஜ உலக பயன்பாட்டில் இந்த காரானது 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள மிகவும் வேகமான 7 சீட்டர் மின்சார கார் என்ற பெருமையை XEV 9S SUV பெறுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 202 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியுமாம்.
மஹிந்த்ரா XEV 9S மின்சார SUV - விலை விவரங்கள்
| வேரியண்ட் | விலை (எக்ஸ் - ஷோரூம்) |
| Pack One Above 59 kWh | ரூ.19.95 லட்சம் |
| Pack One Above 79 kWh | ரூ.21.95 லட்சம் |
| Pack Two Above 70 kWh | ரூ.24.45 லட்சம் |
| Pack Two Above 79 kWh | ரூ.25.45 லட்சம் |
| Pack Three 79 kWh | ரூ.27.35 லட்சம் |
| Pack Three Above 79 kWh | ரூ.29.45 லட்சம் |
மஹிந்த்ரா XEV 9S மின்சார SUV - முன்பதிவு
மஹிந்த்ராவின் புதிய மின்சார 7 சீட்டர் எஸ்யுவிக்கான முன்பதிவானது அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து அதே மாதத்தின் 23ம் தேதி முதல் விநியோகத்தை தொடங்கும் ப்ராண்ட் திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 1.2 மட்டுமே என்ற குறைவான இயக்கச் செலவுகள் மற்றும் மிகக் குறைந்த பராமரிப்புச் செலவுகளுடன், XEV 9S பூஜ்ஜிய உமிழ்வு SUV துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மஹிந்த்ரா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






















