மேலும் அறிய
Advertisement
கொரோனா அச்சத்தால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை ; தீவிர சிகிச்சையில் இருவர் !
கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கொரோனா-ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 27 நிரந்தர சோதனைச் சாவடிகளில் மக்கள் யாரும் நடமாடுகிறார்களா வாகனங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகின்றனவா என்பது குறித்து சோதனை நடைபெறுகிறது. 80 தற்காலிக சோதனை தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஆங்காங்கே சோதனை சாவடிகள் வைத்து வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து பின்னர் அனுப்பி வைக்கின்றனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிசன் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மதுரை கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் கல்மேடு அருகே உள்ள எம்.ஜி.ஆர் காலனி பகுதியை சேர்ந்த லட்சுமி கணவனை இழந்த நிலையில் தன்னுடைய மகள் , மகன், மற்றும் பேரனுடன் இந்த பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மூத்தமகள் ஜோதிகாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று வந்துவிடும் வாழ்வாதாரம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில் லட்சுமி(46) அவரது மகளான கொரோனா பாதிக்கப்பட்ட ஜோதிகா (23)மற்றும் அவரது சகோதரரான சிபிராஜ்(13), ஜோதிகாவின் மகனான ரித்தீஷ்(3) ஆகிய நான்கு பேரும் சாணிபவுடர் விஷத்தை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்
இதில் கொரோனா பாதிக்கப்பட்ட ஜோதிகா மற்றும் அவரது மகனான 3 வயது குழந்தை ரித்தீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் சகோதரர் சிபிராஜ் ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிலைமான் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தற்கொலை குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர். கொரோனா அச்சத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தில் அதில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகள் படிக்க - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion