ரூ.20 ஆயிரம் லஞ்சம்.... கையும் களவுமாக சிக்கிய துணை வட்டாட்சியர்...மதுரையில் பரபரப்பு..!
லஞ்சம் வாங்க முற்பட்டு துணை வட்டாட்சியர் கைதான சம்பவம் மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் அருகே கருத்தபுலியன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் அவரது மனைவி மாலதி பெயரில் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள சொத்திற்காக சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு மேலூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மணிகண்டன் 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் பிரபு மதுரை லஞ்ச ஒழிப்பு முறையிட்டுள்ளார். இதனையடுத்து ரசாயனம் தடயவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் அவரிடம் வழங்கினர்.
சொத்து மதிப்பு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய மேலுார் துணை தாசில்தார் மணி கண்டன் 44, புரோக்கர் மூக்கனை 48, போலீசார் கைது செய்தனர். மேலூர் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச புகார் எழுந்துவரும் சூழலில் துணை தாசில்தார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. pic.twitter.com/ort1Y3HL83
— Dheepan M R (@mrdheepan) August 25, 2022

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















