மதுரை திமுக மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கையானது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய வீட்டு வசதி நகர்ப்புற அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விரிவான திட்ட அறிக்கையில் ஆய்வு செய்த மத்திய அரசு கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பப்பட்டது.
 
கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம்
 
இதனை ஏற்று தமிழக அரசு கூடுதல் கவனமுடன் கடந்த 2024 பிப்ரவரி மாதம் மீண்டும் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது. 19 மாதங்கள் ஆகியும் இதற்கான எந்த ஒரு ஒப்புதலும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக அரசு அனுப்பி இருந்தால் விரிவான திட்ட அறிக்கையை மேலும் சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசிடம் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கேட்டிருந்தார். அதற்கான பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுப்பி உள்ள திட்ட அறிக்கை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளதாக அதில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான் தகவல் வெளியானது. எனவே இந்த கோவை மெட்ரோ திட்டத்தின் மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து, கோவையில் நேற்று திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.