Madurai Airport: அயோத்தி அழைத்து செல்வதாக மோசடி; போலி டிக்கெட்டுடன் வந்த பயணிகள் ஏமாற்றம் - நடந்தது என்ன?
விமானத்தில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்திற்காக லட்சக்கணக்கில் பணம் கட்டியவர்களுக்கு போலி டிக்கெட் வழங்கப்பட்ட விவகாரம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அயோத்தி செல்வதற்காக போலி டிக்கெட்டுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோதி செல்ல விமான டிக்கெட்
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்திற்கான சங்கத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 81 பேர் என மொத்தம் 106 பேர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக காசி மற்றும் அயோத்தி செல்வதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் புக்கிங் செய்துள்ளனர். ராஜா என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சிவானந்தம் என்கிற புக்கிங் ஏஜென்ட் மூலம் பணத்தை கொடுத்து விமானம் தங்குவதற்கு உணவு இடம் ஒரு, ஒரு நபருக்கு முப்பதாயிரம் விகிதம், கிட்டத்தட்ட 31.8 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் அனுப்பியுள்ளார்.
அதனை நம்பி இன்று காலை மதுரையிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து அயோத்தி செல்லும் இண்டிகோ விமானத்தில் செல்வதற்காக 100க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது டிக்கெட் சோதனையின் போது அவர்கள் டிக்கெட் அனைத்தும் போலி என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ராஜாவிடம் கேட்டதற்கு அவர் அந்த ஏஜென்டிடம் பேசி உள்ளார். அதற்கு டிக்கெட் புக் செய்த கிங் ஏஜென்ட் சிவானந்தம் ஏதோ தவறு நடந்துள்ளதாகவும் 18-ம் தேதி மீண்டும் அனைவருக்கும் டிக்கெட் போட்டு தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விமானத்தில் பயணிக்க ஆசையுடன் வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் ஊர் திரும்பியுள்ளனர். விமானத்தில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்திற்காக லட்சக்கணக்கில் பணம் கட்டியவர்களுக்கு போலி டிக்கெட் வழங்கப்பட்ட விவகாரம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ’பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது; ஒவ்வொரு பேயாக ஓட்டுகிறேன்’- ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IAS Officer: முழுசா கலெக்டரே ஆகல அதுக்குள்ள இவ்வளவு ஆட்டமா? தூக்கி அடிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி, தேர்வில் மோசடி?