மேலும் அறிய

மோடியை ஏன் பிடிக்கும்?...பிரதமரை நேரில் சந்தித்தால் இதைதான் கேட்பேன் - மதுரை ஆதீனம் பேசியது என்ன?

மோடி விபூதி அணிகிறார், தியானம் செய்கிறார், சவுதி அரேபியா செல்கிறார்.அதனால் மோடியை பிடிக்கும். இந்த தேர்தலில் தமிழக மக்கள்  முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதீனம் பேட்டி.

”நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன்” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
 

மோடி மீண்டும் பிரதமரானது மகிழ்ச்சி

 
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பாரத பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு நன்றி, வாழ்த்துக்கள். தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.  சீமான், அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள், தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து  வாக்களித்திருக்கிறார்கள். ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்களையும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். மோடி மீண்டும் பிரதமர் ஆனது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது தான். பி.ஜே.பி.,யின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது”. என்றார்.
 
மோடியை நீங்கள் ஆதரிக்க காரணம் ? என்ற கேள்விக்கு :
 
இலங்கை தமிழர்களுக்கு வீடு கொடுத்திருக்கிறார். தமிழீழம் கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துங்கள் என சீமான் தரப்பில் என்னிடம் கூறினார். 
 
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியது தொடர்பான கேள்விக்கு ? 
நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார்.
 
தற்போது பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது என்ற கேள்விக்கு ? 
காமராஜரையே தோற்கடித்தார்கள். அது தான் ஜனநாயகம், ஆட்சியில் இருந்தால் திட்ட தான் செய்வார்கள். திட்ட, திட்ட திண்டுக்கல்லு. வைய வைய வைரக்கல்லு , ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார்.
 
அயோத்தில் பா.ஜ.க தோல்வி குறித்த கேள்விக்கு?
அயோத்தியில் பா.ஜ.க வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள்., இது ஜனநாயக நாடு வெற்றி தோல்வி மக்கள் அளிப்பது தான். மக்களிடம் பா.ஜ.க மீது அதிருப்தி இல்லை. காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள், ஆனால் பாஜக அப்படி பண்ணவில்லை. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன் 
 
மோடியை ஏன் பிடிக்கும்- என்ற கேள்விக்கு?
மோடி தியானம் பண்ணுகிறார், ராமகிருஷ்ண மடத்தில் தரையில் படுத்து உறங்கினார்,  விபூதி அணிகிறார், கடவுள் இல்லை என்று சொல்லாதவர், சவுதி அரேபியா போகிறார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்த கேள்விக்கு?
அ.தி.மு.க கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கும், நாம் தமிழர் கட்சி சீமான் தனது கட்சியை நன்கு கட்டமைத்து உருவாக்கியிருக்கிறார்.
 
இலங்கைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு?
நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்றார்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
வளமான தமிழகம்: சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் இலவச கல்வி, மருத்துவ சேவை விரிவாக்கம் !
வளமான தமிழகம்: சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் இலவச கல்வி, மருத்துவ சேவை விரிவாக்கம் !
Madurai: கல்குவாரியில் 4 வயது சிறுவன் உடல்.. இளைஞர் சிக்கியது எப்படி? வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!
Madurai: கல்குவாரியில் 4 வயது சிறுவன் உடல்.. இளைஞர் சிக்கியது எப்படி? வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!
கட்சி தலைவராக இருந்து தற்போது யூடியூபர் சீமானாக மாறிவிட்டார் – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம் !
கட்சி தலைவராக இருந்து தற்போது யூடியூபர் சீமானாக மாறிவிட்டார் – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம் !

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget