Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ரயில்களில் தினந்தோறும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணாமக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயிவ்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்
வெளியூர்களுக்கு பயணம் செய்வதிலும், நீண்ட தூரம் பயணம் செய்வதிலும் பொதுமக்கள் பெரிதும் விரும்புவது ரயில் பயணத்தை மட்டுமே, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு காரணமாக பல கோடி மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. முன்பதிவு செய்த பெட்டியிலும் கூட்ட அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு சிக்கலாக விமானங்கள் சேவை ரத்தால் ரயில்களில் மேலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இண்டிகோ விமான சேவை ரத்து
குறிப்பாக இண்டிகோ விமானத்தில் 1000 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் இயக்கப்படும் 50% சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 10 நாட்களுக்கு பிறகே தான் இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விமானத்தில் டிக்கெட் கிடைக்காத பயணிகளின் அடுத்த தேர்வாக ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே துறை சார்பாக ஏற்கனவே இயக்கப்படுகின்ற ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இண்டிகோ ர்லைன்ஸ் விமான ரத்தானால் பயணிகள் சிக்கலில் உள்ளதை கருத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்தாக சில ரயில் சேவைகளில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் கூடுதலாக ஒரு ஏசி 3-டயர் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக வெளி மாநிலங்கள் செல்லும் 7 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.
கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் ரயில்கள்
திருச்சிராப்பள்ளி – ஜோத்பூர் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்
(ரயில் எண்: 20482)
பயணம் தொடங்கும் தேதி: 06.12.2025
ஜோத்பூர் – திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்
(ரயில் எண்: 20481)
பயணம் தொடங்கும் தேதி: 10.12.2025
சென்னை பீச் – மும்பை CST சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
(ரயில் எண்: 22158)
பயணம் தொடங்கும் தேதி: 06.12.2025
மும்பை CST – சென்னை பீச் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
(ரயில் எண்: 22157)
பயணம் தொடங்கும் தேதி: 07.12.2025
டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
(ரயில் எண்: 12695)
பயணம் தொடங்கும் தேதி: 06.12.2025
திருவனந்தபுரம் சென்ட்ரல் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
(ரயில் எண்: 12696)
பயணம் தொடங்கும் தேதி: 07.12.2025
டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
(ரயில் எண்: 12601)
பயணம் தொடங்கும் தேதி: 06.12.2025
இந்த கூடுதல் பெட்டிகள் தற்காலிகமானவை எனவும், பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.





















