மேலும் அறிய
Advertisement
“ஹரே ராம் ஹரே கிருஷ்ணா” பாடலை பாடி பக்தி பரவசத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா
கிருஷ்ண வேடமிட்ட குழந்தைகளை கொஞ்சியும், கோசாலையில் பசுமாடு காளைகளுக்கு உணவு வழங்கி நடிகை நமீதா மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பலராம் திருக்கோயிலில் மனமுருக வழிபாடு செய்த நடிகை நமீதா மற்றும் குட்டி பத்மினி. - ஹரேராம் ஹரே கிருஷ்ணா மந்திரபாடலை பாடி பக்தர்களுடன் பக்தி பரவசத்தில் ஈடுபட்ட நடிகை நமிதா.
மதுரையில் நடிகை நமீதா
நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள கிஷ்கான் ஸ்ரீ கிருஷ்ண பலராம் கோயிலில் காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாலையில் கிருஷ்ண பலராம் கோயிலுக்கு வந்த நடிகை நமீதா தனது கணவர் மற்றும் நடிகை குட்டி பத்மினி, நடிகை மைனா நந்தினி உள்ளிட்டோர் மனமுருக வழிபாடு செய்தனர். கிருஷ்ணன் ராதைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு துளசியுடன் பச்சை மாலை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து நடிகை நமீதா கோயிலுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தைகளை கொஞ்சினார். பின்னர் கோயிலில் உள்ளே இருந்த கோசாலையில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளுக்கு உணவுகளை வழங்கினார். தொடர்ந்து கிருஷ்ணர் உபதேசம் செய்வதை கேட்பது போன்று பகவத் கீதையை பெற்றுக்கொண்டனர்.
நமீதா ஹரே கிருஷ்ணா மந்திர பாடலை பாடினார்
தொடர்ச்சியாக அங்கு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்திவிழாவில் கலந்துகொண்ட நடிகை நமீதா மற்றும் நடிகை குட்டி பத்மினி, மைனா நந்தினி ஆகியோர் ஹரே ராம், ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை முழங்கி வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்களை கைகளை உயர்த்தியபடி ஹரே கிருஷ்ணா மந்திரம் ஓதவைத்து வழிபாடு நடத்தினர். அப்போது பக்தர்கள் மத்தியில் நடிகை நமீதா ஹரே கிருஷ்ணா மந்திர பாடலை பாடினார். இதே போன்று நடிகைகள் குட்டி பத்மினி, நடிகை மைனா நந்தினி உள்ளிட்டோர் கிருஷ்ண ஜெயந்தி குறித்து பக்தர்களிடையே பக்தி உரையாற்றினர்.
நமீதா செல்பி எடுத்துக் கொண்டார்
இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் தங்கமயில் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பலராம கோவிந்த தாஸ் நடிகைகள் நமீதா, குட்டி பத்மினி, மைனா நந்தினி ஆகியோருக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார். கோயிலுக்கு வருகை தந்து கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்த நடிகை நமீதா அங்குள்ள பக்தர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது அங்கு வந்த பெண் பக்தர் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கர்ப்பிணியின் வயிற்றை தொட்டுக் கொடுத்து ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என மந்திரம் கூறி ஆசீர்வாதம் செய்து மகிழ்ந்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க என்னிடம் மத சான்று கேட்டனர்” - நடிகை நமீதா வேதனை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தவெக... தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion